தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

3.5 தொகுப்புரை

 • 3.5 தொகுப்புரை

  தமிழ்நாட்டின் நில வரலாறு, மக்கள் பிரிவுகள், தொழில்கள், சாதிமதப் பிரிவுகள், அயலவர்க்கு அடிமைப்பட்டமை, விடுதலைப் போராட்டம், அதன் பயன்கள், தமிழக வரலாற்றின் பண்பாட்டின் மூலச்சான்றுகள் ஆகியன இப்பாடத்தில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

  ஒரு காலத்தில் தமிழ்நாட்டின் வடக்கு எல்லையாக வேங்கடமும் தெற்கு எல்லையாகக் கன்னியாகுமரியும் இருந்தன. இன்று வடக்கு எல்லை மாறிவிட்டது. தமிழகம் நானிலப் பகுப்பு உடையது. ஆயர், குறவர், உழவர், பரதவர் என நானிலத்து மக்களைக் குறிப்பது பழங்கால வழக்கம். தமிழர் நாகரிகம் சிந்துவெளியிலிருந்து அறியப்படுகின்றது. மொகஞ்சதாரோ, ஹரப்பா நகரங்களின் அகழ்வாய்வுகள் பழந்தமிழர் நாகரிகச் சிறப்பை உலகுக்குக் காட்டுகின்றன. சேர சோழ பாண்டி வேந்தர்களால் ஆளப்பட்ட பண்டைக்காலம், சமயங்களின் எழுச்சி பெற்ற இடைக்காலம், அயலவர் ஆட்சி ஓங்கிய பிற்காலம் எனத் தமிழக வரலாறு மூன்று பகுதிகளாக அமைந்துள்ளது. தமிழக வரலாற்றை அறிவதற்கு இலக்கியங்கள், கல்வெட்டுக்கள், அகழ்வாய்வுகள், அயலகப் பயணிகளின் குறிப்புகள் ஆகிய பல சான்றுகள் உள்ளன. தமிழகத்தில் இயற்கை வளமிகுந்த பகுதிகளும், கலைநலம் பொலியும் கோயில்களும் தமிழகப் பெருமையை இன்றும் காட்டிக் கொண்டிருக்கின்றன. இச்செய்திகளை இப்பாடத்தின் வழியாக அறிந்திருக்கிறீர்கள் அல்லவா?

  தன் மதிப்பீடு : வினாக்கள் - II

  1. தமிழகப் பண்பாட்டையும் வரலாற்றையும் காட்டும் மூலச்சான்றுகள் எவை?

  2. இளங்கோ அடிகள் ஏன் துறவியானார்?

  3. மார்க்கோபோலோ தமிழ் மக்களின் பழக்கங்களில் எவற்றை முக்கியமானவையாகக் குறிக்கிறார்?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-10-2017 10:52:40(இந்திய நேரம்)