Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் - I
2.
தேய்புரிப் பழங்கயிற்றினார் எனப்புலவர் பெயர் பெற்றதன் காரணம் யாது?
பொருள் தேடப் பிரிந்த தலைவனின் அறிவும் மனமும் தலைவியிடம் இப்போது திரும்பக் கூடாது என்றும் உடனே திரும்ப வேண்டும் என்றும் இடைவிடாமல் போராட்டம் நடத்துகின்றன. இந்தப் போராட்டத்தில் நைந்து போய் அழிந்து போவோமோ என வருந்தும் தலைவன் தன் நிலைமைக்கு, இரு யானைகள் எதிரெதிர் நின்று இழுக்கும் தேய்புரிப் பழங்கயிற்றை உவமையாகக் கூறுகிறான். இந்த உவமையின் சிறப்புக் காரணமாக இப்பாடலைப் படைத்த புலவர் தேய்புரிப் பழங்கயிற்றினார் எனும் பெயர் பெற்றார்.