Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் - II
3.
மாதங்கீரனார் பாடலில் இடம்பெறும் உருவெளித் தோற்றம் யாது?
மனத்து உணர்ச்சிக் குழப்பம் காரணமாக ஒருவருக்குக் கற்பனையான தோற்றங்கள் கண்முன் தோன்றக்கூடும். இதுவே உருவெளித் தோற்றம் ஆகும். மாதங்கீரனார் பாடல் தலைவன், தலைவியை மணந்துகொள்ளத் தாமதமாவதால் குற்ற உணர்ச்சி கொண்டிருக்கிறான். இக்குழப்பத்தால், தலைவி தன் எதிரே தோன்றித் தன்னைக் கடிந்து பேசுவதாக அவனுக்கு உருவெளித் தோற்றம் உண்டாகிறது.