Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் - I
4.
தலைவன் வருகையைக் கரைந்து அறிவித்த காக்கைக்கு நன்றி பாராட்டத் தோழிகூறும் வழிமுறை யாது?
தொண்டி என்னும் பேரூரில் விளைந்த மொத்த நெல்லரிசியையும் கொண்டு சமைத்த சோற்றில், நள்ளி என்ற வள்ளலின் காட்டில் உள்ள வளமான பசுக்களின் கொடையாகிய மொத்த நெய்யையும் கலந்து, ஏழு கலங்களில் வைத்து நாள்தோறும் அக்காக்கைக்கு ஊட்ட வேண்டும் என்பதே தோழி கூறும் வழிமுறை.