தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU--விடை

  • தன் மதிப்பீடு
    :
    விடைகள்-II
    1.
    கற்பின் இரு வகைகள் யாவை?

         வரைவு எனும் திருமணத்தின் பின் தொடங்கி நிகழும் கற்பு வாழ்பவை, அதன் முந்தைய சூழலை வைத்து இரண்டாக வகைப்படுத்துவர்.

    • களவின் வழி வந்த கற்பு.
    • களவின் வழி வராத கற்பு.

        தலைமக்கள் களவு வாழ்க்கை மேற்கொண்டு, பின்னர் அறத்தொடு நின்று வரைவு புரிந்து கற்பு வாழ்வுக்கு வருவதைக் களவின் வழிவந்த கற்பு என்பர். இது உடன்போக்காகச் சென்றபோதும் நடைபெறும். எனவே, சுற்றத்தினரால் அமைத்துத்தரப்படாத தன்மையும் இதற்கு, உண்டு.

        தலைவன் - தலைவியரிடையே வரைவுக்கு முற்பட்ட காலத்தில் - களவு முறையில் - எவ்விதத் தொடர்பும் இன்றிப் பெற்றோர்களால் அமைத்துத் தரப்படும் இல்லற வாழ்க்கையைக் களவின் வழி வாராக் கற்பு என்பர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 07-09-2017 18:43:27(இந்திய நேரம்)