Primary tabs
- தன் மதிப்பீடு:விடைகள்-II4.ஊடல் தணிக்கும் வாயில்கள் யாவர்?
தலைவி, தலைவன மீது கொள்ளும் பிணக்கு ஊடல் எனப்படும். கற்பு வாழ்வின் போது பரத்தையிற் பிரிவு நிகழ்த்தும் தலைவன் அயல்மனை, அயற்சேரி, புறநகர் என்ற மூன்று இடங்களுக்கும் சென்று தங்கி விடுவான். அப்போது தலைவிக்கு ஊடல் ஏற்படும்.
தலைவிக்கு ஏற்படும் ஊடலைத் தீர்த்து மீண்டும் தலைவன், தலைவியின் கற்பு வாழ்வை (இல்லற வாழ்வை) இணைத்து வைக்கும் இனிய பணியை ஆற்றுபவர்கள் ஊடல் தீர்க்கும் வாயில்கள் எனப்படுவர்.
கொளைவல் பாணன் பாடினி கூத்தர்
இளையர் கண்டோர் இருவகைப் பாங்கர்
பாகன் பாங்கி செவிலி அறிவர்
காமக் கிழத்தி காதற் புதல்வன்
விருந்து ஆற்றாமை என்று இவை ஊடல்
மருந்தாய்த் தீர்க்கும் வாயில்கள் ஆகும்என்ற நம்பி அகப்பொருள் நூற்பா ஊடல் தீர்க்கும் வாயில்களைப் பட்டியலிட்டுக் காட்டுகிறது.