தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

களவியல் - I

 • பாடம் – 4

  D02114 களவியல் - I

  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

  இந்தப் பாடப்பகுப்பு களவு என்பதைப் பற்றிப் பேசுகிறது.

  கைக்கிளையின் நால்வகைப் பாகுபாடுகளைக் கூறுகிறது.

  களவிற்குரிய கிளவித் தொகைகள் - இயற்கைப் புணர்ச்சி - வன்புறை - தெளிவு - பிரிவுழி மகிழ்ச்சி - பிரிவுழிக் கலங்கல் - இடந்தலைப்பாடு - பாங்கன் கூட்டம் முதலான களவியல் இலக்கணச் செய்திகளைச் சொல்கிறது.

  இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
  • கந்தர்வம் பற்றிய விளக்கம் அறிந்து அதனைக் களவு என்பதுடன் இணைத்து உணரலாம்.
  • களவு மலர்வதற்கு முன்பாக நிகழும் காட்சி, ஐயம், துணிவு, குறிப்பறிதல் முதலானவற்றைக் கைக்கிளையின் படிநிலைகள் என உணரலாம்.
  • களவிற்குரிய 17 வகையான கிளவித் தொகைகள் எவை என அறியலாம்.
  • இயற்கைப் புணர்ச்சியின் இரு நிலைகளை உணரலாம்.
  • வன்புறை, தெளிவு, பிரிவுழி மகிழ்ச்சி, பிரிவுழிக் கலங்கல், இடந்தலைப்பாடு பற்றிய இலக்கண விளக்கங்களைக் கற்று உணரலாம்.
  • பாங்கன் கூட்டம் அமையும் நிலைகளையும், அதன் செய்திப் பிரிவுகளையும் உணர்ந்து தெளியலாம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:54:38(இந்திய நேரம்)