தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அசை

  • 3.1 அசை

    அசைதல் - தொழிற்பெயர்

    அசைத்தல் - இதுவும் தொழிற்பெயர். இவ்விரண்டனுக்கும் பொருள் முறையே இயங்கல், இயக்கல் என்பனவாகும். அசைதல், அசைத்தல் ஆகிய இரண்டனுக்கும் முதல் நிலை அல்லது பகுதி ‘அசை’ என்பதாகும். இம்முதல் நிலைக்குப் பொருள்கள் ‘இயங்கு’, ‘இயக்கு’ என்பனவாம். எழுத்து, ஒன்றும் பலவுமாக நடந்து (இயங்கி) ஒலித்து வரையறுத்த ஓசையைக் கொள்ளுவதால் அசை எனப் பெறுகின்றது. மற்று, எழுத்தை ஒன்றும் பலவுமாக நடத்தி (இயக்கி) ஒலிக்கச்செய்து குறிப்பிட்ட அல்லது வரையறுத்த ஓசையைக் கொள்வதனாலும் அசையெனப் பெறுகின்றது. இவ்விருமுறையையும் சுட்ட ‘அவ்வெழுத்து அசைத்திசை கோடலின் அசையே’ என்று குறிப்பிடுகின்றனர்.

    செய்யுள் என்னும் ஒலிச்சங்கிலி அசையென்னும் சிறு வளையங்களால் அமைந்து இயங்குவது; இயங்கும் இயல்புடையது என்பர். செய்யுளின் இயக்கத்திற்கு அடிப்படையாக அமைந்துள்ள இந்த அசையை, உண்டாக்கும்/உருவாக்கும் அமைப்பினை நோக்கி இருவகையாகப் பகுப்பது யாப்பிலக்கணத்தாரது மரபாகும். அவை: நேரசை, நிரையசை.

    3.1.1 நேரசை அமையும் வகை

    நேரசை என்பது அசை வகைகளுள் ஒன்று. இது, நான்கு வகையில் அமையும். நேரசை ஒற்று நீங்கலாக ஓர் எழுத்தே பெறும்.

      அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
      பகவன் முதற்றே உலகு

    இக்குறளின் நான்காம் சீர் ‘ஆதி’ என்பது. இது இரண்டு அசைகளைக் கொண்டுள்ளது. ‘ஆ’ என்ற நெடிலும் நேரசை; ‘தி’ என்ற குறிலும் நேரசை.

    ‘பகவன்’ என்பது ஐந்தாவது சீர். இது இரண்டு அசைகளால் ஆனது. ‘பக’ என்பது ஓர் அசை. ‘வன்’ என்பது ஓர் அசை. ‘வன்’ என்பதில் குறிலும் ஒற்றும் தொடர்ந்துள்ளன; எனவே நேர்அசை.

    ‘எழுத்தெல்லாம்’ என்பது இக்குறளின் மூன்றாவது சீர். மூன்று அசைகளை உடைய சீர் இது. இதன் மூன்றாவது அசை ‘லாம்’ என்பது. இது, நெடிலும் ஒற்றுமாகச் சேர்ந்து உண்டாகிய நேர்அசையாகும்.

    இப்போது, இக்குறளில் ‘நேரசை’ என்று கூறியவற்றையெல்லாம் உற்று நோக்குங்கள்.

    1. தனிக்குறில்
    (தி)
    2. தனிக்குறில் ஒற்று
    (வன்)
    3. தனி நெடில்
    (ஆ)
    4. தனி நெடில் ஒற்று
    (லாம்)
    ஒற்று நீங்கலாக ஓர் எழுத்தே வருவதைக் காணுங்கள்

    என்று நால் வகையால் வருவனவெல்லாம் நேரசை என்பது புலனாகும். இதனையே வேறு வாய்பாட்டால் (வேறொரு வகையில்) நேரசை நான்கு வகையில் உண்டாகும் எனலாம் அல்லவா? அமிதசாகரர்,

    குறில்
    - ழி
    குறில் ஒற்று
    - வெல்
    நெடில்
    - ஆ
    நெடில் ஒற்று
    - வேள்

    என நான்கு வகையால் வரும் ‘நேர்வகை’ என்கின்றார். அவர்தரும் காட்டு, ‘ஆ-ழி-வெல்-வேள்’ என்பன வாகும்.

    யாப்பருங்கலக் காரிகையின் உரையாசிரியராகிய குணசாகரர் நேரசைகளாலேயே ஆகிய பாட்டொன்றைக் காட்டுகின்றார். அதனை அலகிட்டால் நேரசை அமையும்முறை புலனாகும். (அலகு=அளவு)

      ‘போது சாந்தம் பொற்ப வேந்தி
      ஆதி நாதற் சேர்வோர்
      சோதி வானந் துன்னு வாரே’

    (முதலடி)

    போது
    சாந்தம்
    பொற்ப
    வேந்தி
    போ
    து
    சாந்
    தம்
    பொற்
    வேந்
    தி
    தனி நெடில்
    தனிக் குறில்
    தனி நெடில் ஒற்று
    தனிக் குறில் ஒற்று
    தனிக் குறில் ஒற்று
    தனிக் குறில்
    தனி நெடில் ஒற்று
    தனிக் குறில்
    நேர்
    நேர்
    நேர்
    நேர்
    நேர்
    நேர்
    நேர்
    நேர்

    (இரண்டாம் அடி)

    ஆதி
    நாதற்
    சேர்வோர்
    தி
    நா
    தற்
    சேர்
    வோர்
    த.நெ.
    த.கு
    த.நெ.
    த.கு,ஒ
    த.நெ,ஒ
    த.நெ,ஒ
    நேர்
    நேர்
    நேர்
    நேர்
    நேர்
    நேர்

    (மூன்றாம் அடி)

    சோதி
    வானந்
    துன்னு
    வாரே
    சோ
    தி
    வா
    னந்
    துன்
    னு
    வா
    ரே
    த.நெ.
    த.கு
    த.நெ.
    த.கு,ஒ
    த.கு,ஒ
    த.கு
    த.நெ.
    த.நெ.
    நேர்
    நேர்
    நேர்
    நேர்
    நேர்
    நேர்
    நேர்
    நேர்

    இங்ஙனம் அலகிட்டுப் பார்த்ததிலிருந்து,

      ‘நெடில்குறில் தனியாய் நின்றும் ஒற்று அடுத்தும்
      நடைபெறும் நேரசை நால்வகை யானே’

    என்னும் நூற்பாவின் பொருள் நன்கு விளங்குகின்றது அல்லவா? பொருள் காண முயலுங்கள். இது யாப்பருங்கலச் சூத்திரமாகும்.

    3.1.2 நிரையசை அமையும் வகை

    நிரையசை என்பது அசைவகைகளுள் ஒன்று. இதுவும் நேரசையே போல நான்கு வகையில் அமையும். நிரையசை ஒற்று நீங்கலாக இரண்டு எழுத்துகளைப் பெறும்.

    இரண்டு எழுத்துகளைப் பெறும் என்றதனால், ‘நெடில்குறில்’ எனத் தொடரும் எனக் கொள்ளக் கூடாது. ‘குறில்நெடில்’ என்று தொடரும் என்றே கொள்ள வேண்டும். மற்றுக் ‘குறில்குறில்’ என்று தொடரும் அல்லது அடுத்தடுத்து நிற்கும் என்றும் கொள்ள வேண்டும். நிரையசை அமையும் வகையை அறியக் கீழ்வரும் பாட்டை அலகிடுவோம்.

      ‘அணிநிழ லசோகமர்ந் தருணெறி நடாத்திய
      மணிதிக விரொளி வரதனைப்
      பணிபவர் பவநனி பரிசறுப் பவரே’

    (முதலடி)

    (இரண்டாம் அடி)

    மணிதிக
    ழவிரொளி
    வரதனைப்
    (1)
    (2)
    (3)
    மணி கு கு
    திக கு கு
    ழவி கு கு
    ரொளி கு கு
    வர கு கு
    தனைப் கு கு ஒ
    இணைக் குறில்
    இணைக் குறில்
    இணைக் குறில்
    இணைக் குறில்
    இணைக் குறில்
    இணைக் குறில் ஒற்று
    நிரை
    நிரை
    நிரை
    நிரை
    நிரை
    நிரை

    (மூன்றாம் அடி)

    இப்பாடலுள்,

    (அ)
    இணைக்குறில் அல்லது குறிலிணை தனித்து நிரையசையாவன
    அணி, நிழ, தரு, ணெறி, திய, மணி, திக, ழவி, ரொளி, வர, பணி, பவ, நனி, பரி, பவ என்பவையாகும்.
     
     
     
    (ஆ)
    இணைக் குறில் ஒற்று அல்லது குறிலிணை ஒற்று அடுத்து வந்து நிரையசையாவன,
    கமர்ந், தனைப், பவர், சறுப் என்பனவாம்
     
     
     
    (இ)
    குறில் நெடில் இணைந்து வந்து நிரையாவது
    லசோ (அசோ), என்பதாம்.
     
     
     
    (ஈ)
    குறில் நெடில் இணைந்து ஒற்றடுத்து வந்து நிரையசை யாவது.
    நடாத் என்பதாம்

    இவற்றினின்றும், நேரசையைப் போன்று நிரையசையும் நான்கு வகையாக இயங்கும் என்பதை அறிகின்றோம். அவை

      1. இணைக் குறில் - வெறி
      2. இணைக்குறில் ஒற்று - நிறம்
      3. குறில் நெடில் - பலா
      4. குறில் நெடில் ஒற்று - விளாம்.

    3.1.3 அலகும் அலகிடலும்

    அலகு என்பதன் பொருள் ‘அளவு’ என்பதாகும். மாணவர்களே! கம்பராமாயணக் கடவுள் வாழ்த்துப் பாடலையும், பெரிய புராணக் கடவுள் வணக்கப் பாடலையும் நீங்கள் அறிந்தவர்கள்தாம். அவற்றுள் இடம்பெறும் ‘அலகிலா விளையாட்டு உடையார்’ என்னும் தொடரையும், ‘அலகில் சோதியன்’ என்னும் தொடரையும் எண்ணுங்கள். இவ் விடங்களில் அலகு என்பது அளவு என்ற பொருளில்தானே வருகின்றது?.

    செய்யுளில் பயிலும் சீர்களை ‘அசை’ என்னும் செய்யுள் உறுப்பாகப் பகுக்க நம்மனோர் ஓர் அளவைக் கொண்டுள்ளனர். கொள்ளும்போது அசைப் பிரிப்புக்கு மெய்யெழுத்தை ஒரு வரையறை எல்லையாகக் கருதினர். கருதியதனாலேயே மெய்யெழுத்து அளபெடுக்கும் இடம் தவிர மற்றைய இடங்களில் கணக்கில் கொள்ளப்படுவதில்லை என்றனர். இதனை,

      ‘தனிநிலை ஒற்றுஇவை தாம்அலகு இலவே
      அளபெடை அல்லாக் காலை யான’

    என்னும் நூற்பா அறிவிக்கின்றது.

      நேர் அசை ஓர் அலகு
      நிரை அசை இரண்டு அலகு.

    ஓர் அலகு என்பது ஒற்று நீங்கலாக ஓர் எழுத்து; இரண்டு அலகு என்பது ஒற்று நீங்கலாக இரண்டு எழுத்து என்று கருதவேண்டும்.

    அலகிடும் போது மனத்தில் கொள்ள வேண்டியன.

    (அ) தனிக்குறில், நேரசை என்றார் ஆசிரியர் என்பதைப் பற்றிக் கொண்டு

    (1)
    (2)
    அகர
    அ/ க/ ர
    கு கு கு
    நேர் நேர் நேர்
    முதல
    மு/ த/ ல
    கு கு கு
    நேர் நேர் நேர்

    என்றவாறு அசையைப் பிரித்தல் கூடாது. இணைக் குறில் நிரையசை என்றதை மனத்தில் கொண்டு

    (1)
    (2)
    அகர
    அக/ ர
    கு கு கு
    முதல முத/ ல
    கு கு கு
    இணைக் தனிக் குறில் குறில்
    இணைக் தனிக் குறில் குறில்
    நிரை நேர்
    நிரை நேர்

    என்றவாறு பிரித்தல் வேண்டும். பிரித்த பின், எஞ்சி நின்ற குற்றெழுத்தே, நேரசை எனக் கொள்ளல் வேண்டும்.

    (அ) குறிலும் நெடிலும் இணைந்து வந்து நேர்அசை உருவாகும்; குறிலும் நெடிலும் இணைந்து ஒற்று அடுத்து வந்து நிரை அசை உருவாகும்; என்றவற்றைக் கொண்டு நெடிலும் குறிலும் இணைந்தும், நெடிலும் குறிலும் இணைந்து ஒற்று அடுத்தும் வந்து நிரையசை உருவாகும் எனக்கொள்ளல் கூடாது. ‘குறில் நெடில்’ என்ற வைப்பு முறையை நோக்க வேண்டும்.

    விளாம்
    ளா/விம் (அல்லது)
    ஆ/வி
    விளாம்/
    கு நெ ஒ

    குறில் நெடில் ஒற்று

    நெ. கு ஓ

    தனிநெடில் தனிக்குறில் ஒற்று

    நெடில் குறில்

    தனிநெடில் தனிக்குறில்

    நிரையசை
    நேர் நேர்
    நேர் நேர்

    (ஆ) ஒற்றெழுத்துகள் கலந்து வரும் போது சீர்களின் இடையே வரும் ஒற்று எழுத்து அசையை நிர்ணயிக்கும் காரணியாக அமையும் அல்லது அசை எல்லையை நிர்ணயிக்கும்.

    (காட்டு)

    1) அன்னம்

    அன் / னம்

    2. அனம்

    அன /ம்

    3) அனந்தன்

    அனந் /தன்

    த.கு.ஒ த.க.ஒ

    கு கு ஒ

    இணைக்குறில் ஒற்று

    கு கு ஒ கு.ஒ இ.கு.ஒ தனிக்குறில் ஒற்று
    நேர் நேர்
    நிரை
    நிரை நேர்

    இவற்றள் ன், ம், ந், ன் எனும் ஒற்றெழுத்துகள் அசையெல்லையாக அமைந்தமையைப் பாருங்கள்.



    தன் மதிப்பீடு : வினாக்கள் - I
    1.
    செய்யுளுக்கும் நூற்பாவுக்கும் உள்ள வேறுபாடு என்ன?
    2.
    ‘அசை’ என்னும் முதனிலைத் தொழிற்பெயரின் பொருள் யாது?
    3.
    செய்யுளின் சந்தத்தை உண்டாக்கும் அடிப்படைச் செய்யுளுறுப்பு எது?
    4.

    நேரசை எந்த நான்கு வகையில் அமையும்?

    5.
    நிரையசை அமையும் வகை நான்கனையும் தருக.
    6.
    நேரசை எத்தனை அலகுகளைக் கொண்டிருக்கும்?
    7.
    நிரையசை எத்தனை அலகுகளைக் கொள்ளும்?
    8.
    சாவி, விசா - இவற்றுள் எது நிரையசை? ஏன்?
    9.
    யாப்புலகில் மெய்க்கு மதிப்பு உண்டா?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 10-07-2018 15:34:43(இந்திய நேரம்)