தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Diploma Course - D04124- தொகுப்புரை

  • 4.5 தொகுப்புரை

        இதுவரை நீங்கள் படித்த பாடத்திலிருந்து மரபு இலக்கண அறிஞர்களும் மொழியியல் அறிஞர்களும் தமிழ் வினைச்சொல்லை எவ்வாறு காலம் காட்டும் இடைநிலைகளுக்குத் தக்கவாறு பிரித்துக் கையாண்டனர் என்பது பற்றி அறிந்துகொண்டீர்கள். இவற்றோடு வினைச்சொல் விளக்கம், வினைச்சொல்லின் உள்ளமைப்பு போன்றவற்றையும் படித்து     அறிந்தீர்கள். தொல்காப்பியர் தொல்காப்பியத்தில்     காலஇடைநிலைகளைக் குறிப்பிட்டார். ஆனால் அவை இன்னின்ன எனக் குறிப்பிடவில்லை என்பதை உணர்ந்தீர்கள். சங்க     காலத்திலும்     இடைக்காலத்திலும் தற்காலத்திலும் வழங்கிவந்துள்ள     கால இடைநிலைகளைச் சான்றுகளுடன் விளக்கமாக அறிந்து கொண்டீர்கள்.

         தன் மதிப்பீடு : வினாக்கள் - II
    1.
    இடைக்காலத்தில்     இருந்த      நிகழ்கால இடைநிலைக்கான சான்றுகளைக் காட்டுக.
    2.
    தற்காலத்தில்     நிகழ்கால இடைநிலைகளின் மாற்றுருபுகள் என்னென்ன வடிவங்களில் வரக் காண்கிறோம்?
    3.
    தற்காலத்தில் அமைந்துவரும்     எதிர்கால இடைநிலைக்கான சான்றுகள் தருக.
புதுப்பிக்கபட்ட நாள் : 07-08-2017 13:35:17(இந்திய நேரம்)