தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tamil Education On The Web-‘கலை, கலைக்காகவே’ எனும் வாதம்

  • பாடம் 5

    D06115 : ‘கலை, கலைக்காகவே’ எனும் வாதம்

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

        கலை இலக்கியத்தின் நோக்கம் பற்றி பேசுகிறது. கலை, கலைக்காகவே என்று சொல்லுகிற வாதப் பொருளை ஆராய்கிறது. கலை, கலைக்காகவா, வாழ்வுக்காகவா என்ற கேள்வியின் பொருத்தங்களைப் பேசுகிறது.     கலை, வாழ்க்கைக்காகவே என்பது தமிழ் மரபில் உள்ள பொதுவான கருத்து எனச் சொல்லுகிறது.

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
    இலக்கியத் திறனாய்வுக்குரிய ஒரு முக்கியமான பார்வைக் கோணத்தை அறிந்திட உதவுகிறது.
    இலக்கியத்தின் பண்பும், பயனும் எவ்வாறு இணைந்து போக வேண்டும் என்பதனை அறிந்திட உதவுகிறது.
    கலை,     இலக்கியம்,     சிறந்ததாக     அல்லது வெற்றி உடையதாகக் கருதப் படுவதற்குரிய பண்புநிலைகளை அறிந்திட உதவுகிறது.
    இலக்கியக் கொள்கையில், பலகாலும் பேசப்பட்டு வரும் பிரச்சனைகளில் ஒன்றைப் பற்றி அறிந்திட உதவுகிறது.
புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 07:26:12(இந்திய நேரம்)