Primary tabs
- 
பாடம் - 2P10112 சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்உலக மொழிகளில், குறிப்பாகத் தமிழில் சிறுகதை தோன்றி வளர்ந்த வரலாற்றைக் குறிப்பிடுகிறது. வரலாற்று நோக்கில், 1900 முதல் தற்காலம் வரையிலும் தோன்றி வளர்ந்த சிறுகதைகளைப் பற்றிக் கூறுகிறது. சிறுகதை வளர்ச்சியில் இதழ்களின் பங்களிப்புகளையும் சுட்டுகிறது. போட்டிகள், பரிசுகள், தொகுப்புப் பணிகள் ஆகியவற்றால் சிறுகதை பெற்ற வளர்ச்சியையும் எடுத்துரைக்கிறது. சிறுகதை வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்புப் பற்றியும் குறிப்பிடுகிறது. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் சிறுகதை அடைந்த வளர்ச்சியையும் கூறுகிறது. 
 
 இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்? -  
                            தமிழில் சிறுகதை தோன்றி வளர்ந்த வரலாற்றை அறிந்து கொள்ளலாம். 
-  
                            சிறுகதை வளர்ச்சியில் இதழ்கள் ஆற்றிய பணிகளைத் தெரிந்து கொள்ளலாம். 
-  
                            சிறுகதை வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பையும் அறிந்து கொள்ளலாம். 
-  
                            இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் சிறுகதை வளர்ந்த வரலாற்றையும் தெரிந்து கொள்ள முடியும். 
 
-  
                            
 
						 
						
 
 
 






