Primary tabs
-
3.0 பாட முன்னுரை
புதினம் தமிழிலக்கியத்திற்குக் கிடைத்த புதிய வரவு. மேலை நாட்டினர் தொடர்பால் தமிழ் மொழி அடைந்த நன்மைகளில் இதுவும் ஒன்று. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றிய புதின இலக்கியம், இருபதாம் நூற்றாண்டில் பெரும் வளர்ச்சியைக் கண்டது. புதினங்களைத் துப்பறியும் புதினங்கள், சமூகப் புதினங்கள், வரலாற்றுப் புதினங்கள், அறிவியல் புதினங்கள், வட்டாரப் புதினங்கள், மொழி பெயர்ப்புப் புதினங்கள் தழுவல் புதினங்கள் என ஆறு வகையாகப் பிரித்தறியலாம்.