தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Pudhinum - I-3. புதின வகைப்பாடுகள்

  • பாடம் - 3
     

    P10133 புதின வகைப்பாடுகள்

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    இருபதாம் நூற்றாண்டில் பெரும் வளர்ச்சியடைந்த இலக்கிய வகை புதினம் ஆகும். புதினத்தின் பல்வேறு வகைகளை இப்பாடம் எடுத்துரைக்கின்றது. துப்பறியும் புதினம், சமூகப் புதினம், வரலாற்றுப் புதினம், அறிவியல் புதினம், வட்டாரப் புதினம் ஆகியவற்றை விளக்குகின்றது. மேலும் இப்பாடம் மொழி பெயர்ப்பாகவும், தழுவலாகவும் தமிழ் மொழியில் வந்து சேர்ந்துள்ள புதினங்களையும் அறிமுகம் செய்கின்றது.

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    இந்தப் பாடத்தின் மூலமாகப் புதின இலக்கியத்தின் வகைகள் குறித்து அறிய முடிகின்றது.

    துப்பறியும் புதினங்கள் குறித்து அறியலாம்.

    சமூகப் புதினங்கள் உணர்த்தும் செய்திகளை அறிந்து கொள்ள முடியும்.

    வரலாற்றுப் புதினங்களின் வளர்ச்சி குறித்துத் தெரிந்து கொள்ளலாம்.

    அறிவியல் புதினங்கள் பற்றி அறியலாம்.

    வட்டாரப் புதினங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம்.

    மொழிபெயர்ப்புப் புதினங்கள், தழுவல் புதினங்கள் ஆகியவை பற்றிய செய்திகளை அறியலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 08:18:35(இந்திய நேரம்)