Primary tabs
-
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
சிறந்த தமிழ்ப்புதின ஆசிரியர்களுள் ஒருவர் அகிலன். இந்தப் பாடம் அவரது ‘பொன்மலர்' என்ற நாவலின் சிறப்புகளை எடுத்துக் கூறுகிறது. அகிலன் தமது பொன்மலர் நாவலில் சமுதாயத்தை எவ்வாறு சித்திரித்துள்ளார் என்பதையும் சொல்கிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
இந்தப் பாடத்தைப் படிப்பதால் பின்வருவன குறித்து அறியலாம்.
அகிலனின் பொன்மலர் நாவலின் கதைச்சுருக்கம் பற்றி அறிந்து கொள்ள முடியும்.
நாவலில் இடம்பெறும் தலைமை மாந்தர், துணைமாந்தர் பற்றி அறியலாம்.
சமுதாயத்தில் காணப்படும் அநீதிகளை, ஆசிரியர் நாவலில் கண்டிப்பதை அறிந்து கொள்ளலாம்.