Primary tabs
5.5 தொகுப்புரை
எழுத்தாளர் வரிசையில் அகிலனுக்கு ஒரு குறிப்பிட்ட இடம் உண்டு. அவர், சமுதாயச் சூழலில் பெண்களுக்கு ஏற்பட்ட இன்னல்களையும் பாதிப்புகளையும் நாவல்களாகப் படைத்தார். அவர்தம் நாவல்கள் பெண்களுக்கு முதலிடம் தந்து போற்றும் வகையில் அமைந்துள்ளன.
இவர் இக்காலச் சமுதாய வாழ்வின் ஒழுக்கக் கேடுகளையெல்லாம் மிகத் துணிவோடு வெளிப்படையாக எடுத்துப் பேசுகிறார். ‘அவரவர்களுடைய செய்கையின் பயனை அவரவர்கள் அனுபவிக்க வேண்டும்' என்ற அறமுறைப் பழி வினையினைத் திருமூர்த்தி வாயிலாக ஆசிரியர் வெளிப்படுத்தும் திறன் உணர்ந்து மகிழத் தக்கது. கள்ளப்பணம் எந்தெந்த வகைகளில் எல்லாம் சமுதாயத்தைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்குகிறது என்பதை நாவலாசிரியர் அகிலன் இந்நாவலில் பல காட்சிகளில் காட்டியுள்ளார்.