தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

 • பாடம் - 5

  P10215 மறைமலையடிகளார் உரைநடை

  E



  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

  தமிழ்மொழி உரைநடை வரலாற்றில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியவர் மறைமலையடிகள் என்பதைக் கூறுகிறது. தமிழ்ப்பணியோடு சைவப் பணியும் ஆற்றிய அடிகளாருடைய உரைநடைத் திறனை இந்தப் பாடம் விளக்குகிறது.



  இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  இந்தப் பாடத்தைப் படிப்பதால் பின்வரும் பயன்களைப் பெறலாம்.

  • மறைமலையடிகள் தமிழ் உரைநடையின் வடிவத்திலும், பொருளிலும், நடையிலும் பல மாற்றங்களைக் கொண்டு வந்தவர் என்பதை உணரலாம்.
  • தனித்தமிழ் இயக்கத்தைப் பேரியக்கமாக வளர்த்த அடிகளார், தனித்தமிழ் நடைக்குச் செவ்விய முறையில் தனி ஒருவராய் நின்று வழிகாட்டி வெற்றியடைந்தவர் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
  • ஆங்கில நூல்களிலுள்ள மேல்நாட்டு உயரிய முற்போக்குக் கருத்துகளையும், ஆராய்ச்சி உரைகளையும் மொழிபெயர்த்ததன் மூலம் தமிழ் நடையை வளப்படுத்தியிருப்பதை அறிந்து கொள்ளலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 08:39:57(இந்திய நேரம்)