Primary tabs
-
3)உலாவின் அமைப்பு முறை பற்றிக் கூறுக.
உலாச் செய்திகள் கண்ணிகளால் அமைந்தவை. கண்ணி என்பது இரண்டு கண்போல் இணைந்த இரண்டு வரிகளால் அமைவது. உலாவின் முற்பகுதியில் உலாவரும் பாட்டுடைத் தலைவனது குலம், குடிப்பிறப்பு, மரபு, அழகு, கொடை, அணி அணியும் முறை, அறிவு, ஆண்மை, அன்பு, நகர வரவேற்பு, களிறு ஊர்தல் ஆகியன கூறப்பெறும். தலைவன் சிறப்புக் கூறுங்கால் பத்து வகைச் சிறப்புகள் எடுத்துரைக்கப்படும். இதனைத் தசாங்கம் என்பர். பிற்பகுதியில் அவனைக்கண்ட பேதை, பதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்ற ஏழு வகைப் பருவ மகளிர் (பொதுமகளிர்) அழகும், பண்பும், காதலும், மயங்கும் முறையும் எடுத்துரைக்கப்படும்.