தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

    • 1)
      விக்கிரம சோழன் சிறப்பினை எழுதுக.

      முதற்குலோத்துங்கனுக்கு மகனாகப் பிறந்த மன்னன் விக்கிரமசோழன். இவன் ஆட்சிக்காலம் முழுவதும் கங்கை கொண்ட சோழபுரமே சோழநாட்டின் தலைநகராய் அமைந்திருந்தது. இவனது ஒப்பற்ற செங்கோல் எட்டுத் திசையையும் அளக்கிறது. இவனுடைய வெண்கொற்றக் குடை எட்டுத் திசைகளுக்கும் நிழல் செய்கின்றது. வேற்றரசர்கள் தங்கள் மகுடங்களை இறக்கி வைத்து மன்னன் பாதங்களைப் பணிகின்றனர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2017 19:16:08(இந்திய நேரம்)