Primary tabs
பாடம் - 3
P10413 மணிமேகலை-விழாவறை காதை
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று மணிமேகலை. அதில் முதல் பகுதியான விழாவறை காதை என்ன சொல்கிறது என்பதை இப்பாடம் விளக்குகின்றது. குறிப்பாக, இந்திரவிழா நடைபெற்ற சிறப்பும், அனைவரும் சமய வேறுபாடில்லாமல் அதனைக் கொண்டாடிய முறையும் கூறப்படுகின்றன.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
பழங்காலத் தமிழக மாந்தர் விழா நிகழ்த்திய முறையையும், ஒப்பற்ற நாகரிகத்தையும்
அறிந்து கொள்ளலாம்.
இந்திரவிழா
இருபத்தெட்டு நாட்கள் கொண்டாடப்பட்ட சிறப்பினையும், அதுவே பழங்கால
மரபாக இருந்தமையையும் உணரலாம்.
பூம்புகார் நகரத்தில் சான்றோர்கள் ஒருங்கே கூடி நகரின் நலம் நாடினார்கள்
என்பதை அறியலாம்.
விழா எடுப்பதால்
நகரம் வளமடையும் என்றும், விழா எடுக்காவிட்டால் துன்பம் ஏற்படும் என்றும்
ஒரு நம்பிக்கை அக்காலத்து மக்களிடையே இருந்ததை அறியலாம்.
விழாக்
காலங்களில் சமயப் பூசல் இல்லாமல் சமயப் பொறை காத்துள்ளனர்
என்பதை அறியலாம்.
முரசு அறைவோர் நகரத்தையும், மழையையும், செங்கோலையும் முதலில் வாழ்த்திப்
பின்னரே செய்தி அறிவிப்பது மரபு என்ற செய்தியினை அறியலாம்.