தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kappiyam-1. காப்பியத்தின் இலக்கணம்

  • பாடம் 1

    P10411 காப்பியத்தின் இலக்கணம்

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    காப்பியம் என்னும் சொல்லின் பொருளையும், காவியம் அல்லது காப்பியம் என்னும் தொடர்நிலைச் செய்யுள் பற்றிய செய்திகளையும் இப்பாடம் தெரிவிக்கின்றது.

    தண்டியலங்காரம் கூறும் காப்பிய இலக்கணம் பற்றிய செய்திகள் இப்பாடத்தில் விளக்கப்பட்டுள்ளன. மேலும் பிற நூல்கள் கூறும் செய்திகளும் தரப்பட்டுள்ளன.

    காப்பியப் பண்பான பாவிகம் பற்றிய செய்திகள் இப்பாடத்தில் விளக்கப்பட்டுள்ளன.

    காப்பியத்தின் தோற்றமும், வளர்ச்சியும் குறித்த செய்திகள் தரப்பட்டுள்ளன.

    பண்டைக் காலம்முதல், இக்காலம் வரையிலுள்ள காப்பியங்கள் குறித்த பாகுபாடும் இப்பாடத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இப்பாடத்தில் பெருங்காப்பியம், சிறுகாப்பியம் குறித்த செய்திகள் விரிவாகத் தரப்பட்டுள்ளன.

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    தனிப் பாடல்களாக இருந்த இலக்கிய வகை, காப்பிய இலக்கியமாக வளர்ந்த தன்மையை அறிய முடிகிறது.

    காப்பிய இலக்கணம் குறித்துத் தண்டியலங்காரம் முதலான நூல்கள் கூறும் செய்திகளை அறிய முடிகிறது.

    தமிழ் இலக்கிய வரலாற்றில் காப்பியத்தின் பங்கு, பெருங்காப்பியம், சிறுகாப்பியம் என்னும் பாகுபாடு, காப்பிய வளர்ச்சிப் படிநிலைகள் ஆகியவற்றை இப்பாடத்தின் வாயிலாக நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

    தன்னேரில்லாத் தலைவனின் உயரிய பண்புகள், பண்டைக் கால மக்களின் வாழ்வு, சமயம், அரசியல், பண்பாட்டு நெறிமுறைகள் முதலியவற்றைக் காப்பியங்களின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

    கவிஞனின் புலமைத் திறம், காப்பியப் படைப்பில் முழுமையாக வெளிப்படும் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.


    பல்வேறு நீதிகளை உள்ளடக்கிச் சுவைபட விளக்கும் ஆற்றல் வெளிப்படுவதனை அறிந்துணரலாம்.

    பாட அமைப்பு

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 09:50:26(இந்திய நேரம்)