தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kappiyam-4. சீவக சிந்தாமணி- விமலை பந்தாடுதல்

  • பாடம் - 4

    P10414 சீவக சிந்தாமணி - விமலை பந்தாடுதல்

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    பெருங்காப்பியங்கள் ஐந்தனுள் ஒன்று சீவக சிந்தாமணி. இந்நூலின் எட்டாம் உட்பிரிவு விமலையார் இலம்பகம். இப்பகுதி என்ன சொல்கிறது என்பதை இப்பாடம் விளக்குகின்றது. விசயை, தன் மகன் சீவகன்பால் கொண்டிருந்த தாயன்பு புலப்படுகின்றது. அறநெறிகளைப் பின்பற்றி, பகைவனான கட்டியங்காரனை வீழ்த்தி, அரசைக் கைப்பற்றிய தன் மகன் நல்லாட்சி நடத்த வேண்டும் என்கின்ற அவளது உணர்வு வெளிப்படுகின்ற நிலையை இப்பாடம் விளக்குகின்றது.

    விமலையின் பந்தாட்டச் சிறப்பும், விமலையைச் சீவகன் மணந்த வரலாறும் விரித்துரைக்கப் படுகின்றன.

    சோதிடக் கலையின் நுட்பமும், கனவின் சிறப்பும் இங்குத் தெளிவாகக் காட்டி விளக்கப்படுகின்றன.

    இந்தப் பாடத்தில் சீவக சிந்தாமணியின் பெயர்க் காரணமும், நூலின் அமைப்பும், சிறப்பும் குறிப்பிடப் பெறுகின்றன. நூலாசிரியரின் சிறப்பும் பெருமையும் இப்பாடத்தின் வழி தெரிவிக்கப் பெறுகின்றன.

    இந்தப் பாடத்தைப் படிப்பதனால் என்ன பயன் பெறலாம்?

    விருத்தம் என்னும் புதிய பாவகை முதன் முதலில் திருத்தக்க தேவரால் கையாளப்பட்டது என்பதனை அறிந்து கொள்ளலாம்.

    தாயன்பு, சகோதரத்துவம், நட்புப் பாராட்டல் முதலான பண்புகள் வெளிப்படுவதனை இப்பகுதியில் அறிந்து கொள்ளலாம்.

    கனவுக் காட்சி பலித்தல், சோதிடக் கலையின் தன்மை, நாட்டுப் பற்று, அரச நெறிமுறைகள் முதலான செய்திகளைப் பற்றியும் அறிந்து கொள்ள முடிகிறது.

    நூல் ஆசிரியரின் பெருமை, பாட்டுடைத் தலைவன் சீவகனின் சிறப்பு, விமலையின் தனித்திறன், இலக்கியச் சிறப்பு ஆகிய செய்திகளை முறைப்படுத்திக் காணலாம்.

    பண்டைத் தமிழரின் பண்பாட்டு நிலைகளைப் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.

    பாட அமைப்பு

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 09:54:30(இந்திய நேரம்)