தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

1:0-பாட முன்னுரை

  • 1.0 பாட முன்னுரை

    தமிழ் இலக்கியம் பல வகைப்படும். தன்னுணர்ச்சிப் பாடல்களும், அகம்,புறம் பற்றிய பாடல்களும் சங்க இலக்கியமாக மலர்ந்தன. அற நூல்கள் நீதி இலக்கியமாக வடிவம் கொண்டன. பிற்காலத்தில் பக்திப் பனுவல்கள், க்தியின் அடிப்படையில் இலக்கியத் தன்மை பெற்றுப் பெருமை கொண்டன.

    நல்ல நீதிகளை உள்ளடக்கிக் கதைபொதி பாடல்களாக அமைந்தவை காப்பியம் என்னும் இலக்கிய வகையாக மலர்ந்தன.  இலக்கியம் கண்டதன் பின், இலக்கணம் இயம்புதல் என்னும் கருத்துப்படி, இந்தக் காப்பிய இலக்கியங்கள் தோன்றிய பிறகு, அவற்றுக்கான இலக்கண விதிகளும் நூல்களில் இடம் பெற்றன.

     தண்டியலங்காரம் என்னும் நூல், காப்பிய அமைப்பை, சிறப்பாகத் தமிழ்ப் பெருங்காப்பியங்களின் இலக்கணத்தை, வரையறுத்துக் கூறுகின்றது. அவ்வகையில் காப்பிய இலக்கணம் குறித்த கருத்துகள் நம் பாடப் பகுதியில் தெரிவிக்கப்படுகின்றன. காப்பியம் என்பதன் பொருள்; காப்பியத்தின் தோற்றம், வகைகள்; காப்பியத்தின் இலக்கணம்; பெருங்காப்பியம், சிறு காப்பியம் பற்றிய செய்திகள் ஆகியவை இப்பாடத்தில் விளக்கப்படுகின்றன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 09:50:00(இந்திய நேரம்)