தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

  • 4.1 மொழிபெயர்ப்பு வகைகள்

    • ஒரே மொழிக்குள் நடைபெறும் உரைவளமும் ஒருவகை மொழிபெயர்ப்பு.

    • மொழி விட்டு மொழி மாற்றுவதே சரியான மொழிபெயர்ப்பு.

    • எழுத்து வடிவத்திற்கு நாட்டிய வகையில் அபிநயம் பிடிப்பதும் ஒருவகையான மொழிபெயர்ப்பு.

    எனச் சிலர் கூறுகின்றனர் என்று டாக்டர். வீ. சந்திரன் தனது மொழிபெயர்ப்பியல் அணுகுமுறைகள் என்ற நூலில் கூறிச் செல்லுகிறார். எந்நிலை அமையினும் மொழிபெயர்ப்பு என்று கூறுவதை விட மொழி ஆக்கம் என்று கூறப்படுவதே சரியென மா. சண்முக சுப்பிரமணியன் போன்றோர் கருதுகின்றனர்.

    பொதுவாக மொழிபெயர்க்கும் பாணியில் மொழிபெயர்ப்பு ஆறு வகைகளாகப் பகுக்கப்படும். அவை வருமாறு:

    (1) சொல்லுக்குச் சொல் பெயர்த்தல் (Literal And Metaphrase Translation)

    (2) விரிவான மொழிபெயர்ப்பு (Amplification)

    (3) முழுமையான அல்லது சரியான மொழிபெயர்ப்பு (Close or Accurate Translation)

    (4) சுருக்கம் (Paraphrase or Abridgement)

    (5) தழுவல் (Adaptation)

    (6) மொழியாக்கம் (Transcreation)

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 10:33:11(இந்திய நேரம்)