தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சமணச் சிற்றிலக்கியங்கள், புராணங்கள், பிற நூல்கள்

 • P20234 சமணச் சிற்றிலக்கியங்கள், புராணங்கள், பிற நூல்கள்

   

  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

  காப்பியங்களையும் இலக்கணங்களையும் படைத்துத் தமிழை வளப்படுத்தியது போன்றே சமணர்கள் பிற்காலத்தில் தோன்றிய சிற்றிலக்கிய வகைகளுள் சிலவற்றையும் படைத்தார்கள்.

  சமணச்சான்றோர் புராணங்களைப் படைத்து மணிப்பிரவாள நடைக்கு முன்னோடிகளாய் அமைந்தனர்.

  இவை மட்டுமன்றி, கணிதம், சோதிடம் போன்ற நூல்களையும் தந்துள்ளனர்.

  சமணர்தம் கோட்பாட்டிற்கேற்ப, சிற்றிலக்கிய வகைகளைப் பயன்படுத்தி இலக்கியம் படைத்தனர். இவற்றை இப்பாடம் விரிவாக எடுத்துரைக்கிறது.

  இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  சமணம் சிற்றிலக்கியத் துறையில் ஆற்றிய தொண்டினைத் தொகுத்துக் கொள்ளலாம்.
  சிற்றிலக்கிய வகைகளில் கிடைத்த நூல்களைப் பற்றிய பட்டியலைத் தயாரிக்கலாம்.
  பல சிற்றிலக்கியங்கள் ஏட்டுச் சுவடிகளில் உறங்குவதை அறிந்து கொள்ளலாம்.

  மணிப்பிரவாள நடையின் முன்னோடிகள் சமணர் என்பதை அடையாளம் காணலாம்.

  சோதிடம், கணிதம் போன்ற துறைகளிலும் சமணர்தம் பங்கை வகைப்படுத்திக் காணலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 11:54:42(இந்திய நேரம்)