தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பழந்தமிழ் நூல்களில் சமணம்

 • P20231 பழந்தமிழ் நூல்களில் சமணம்


  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

  சமண சமயம் தமிழகத்தில் தோன்றிய சமயமா? அல்லது வடக்கிலிருந்து இங்கு வந்த சமயமா? வடக்கிலிருந்து இங்கு வந்தது என்றால் எப்போது வந்தது? தமிழகத்தில் எப்படி  வேரூன்றியது? அதற்கான காரணங்கள் யாவை? இவை னைத்தையும் இப்பாடம் விளக்க முற்படுகிறது.

  பழந்தமிழ் நூல்களான தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களும் சங்கம் மருவிய கால அறநூல்களாகிய திருக்குறள், நாலடியார், பழமொழி போன்ற நூல்களும் சமணம் தமிழகத்தில் இருந்ததற்கான குறிப்புகளைச் சுட்டிக் காட்டுகின்றன. இரட்டைக்காப்பியங்களாகிய சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றிலும் சமணம் தமிழகத்தில் இடம்பெற்றிருந்தமைக்கான சான்றுகளை இப்பாடம் விளக்குகிறது.


  இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  நமக்குக் கிடைத்துள்ள நூல்களுள் மிகப் பழமையான இலக்கண நூலாகிய தொல்காப்பியத்திலேயே சமண சமயக் கூறுபாடுகள் இடம் பெற்றுள்ளன என்பதைத் தொகுத்துக் கொள்ளலாம்.

  சங்க இலக்கியங்களாகிய பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களில் சமண சமயக் கருத்துகள் இடம் பெறுவதால் சமண சமயம் அக்காலத்திலேயே தமிழகத்தில் வேரூன்றியிருந்ததை அறிந்து கொள்ளலாம்.

  அனைத்துச் சமயங்களும் சங்க காலத்தில் ஒற்றுமையாகவே இருந்துள்ளன. சமயப் பொறையே மேலோங்கியிருந்தது. சமயக் காழ்ப்புக்குச் சங்ககாலத்தில் இடமில்லை என்பதை எடுத்துக் காட்டலாம்.

  திருக்குறள் முதலான பெரும்பாலான அறநூல்கள் சமண சமயத்தின் கொல்லாமை அறத்தையே பெரிதும் போற்றியுள்ளன என்பதைச் சுட்டிக்காட்டலாம்.

  காப்பியங்கள், கதைகளின் வழியாகச் சமண சமயக்கோட்பாடுகளை விளக்கிச் செல்வதைத் தெரிந்து கொள்ளலாம்.
புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 11:48:40(இந்திய நேரம்)