தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

5 பழந்தமிழ் நூல்களில் பௌத்தம்

 • P20235 பழந்தமிழ் நூல்களில் பௌத்தம்


  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

  வடக்கில் தோன்றியது பௌத்த சமயம்  என்பது வரலாறு கூறும் செய்தி.

  வடக்கில் தோன்றிய  பௌத்த சமயம் தமிழகத்திற்கு எப்போது வந்தது?

  தமிழகத்தில்  அச்சமயம் வேரூன்ற மூலகாரணமாய் அமைந்தவர் யார்?

  தமிழகத்தில் ஒருகாலத்தில் செல்வாக்குப் பெற்ற சமயங்களில் ஒன்றாக விளங்கிய பௌத்த சமயம் எதனால் இங்கு நிலை பெறாமல் போயிற்று?

  பழந்தமிழகத்தில்  பௌத்த சமயம் சிறப்புப் பெற்றிருந்த தன்மையினைப் பழந்தமிழ் இலக்கியங்கள் எவ்வாறு காட்டுகின்றன?

  பழந்தமிழ்க் காப்பியங்களாகிய சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றில் பௌத்த சமயம் பற்றிக் காணப்படும் குறிப்புகள் யாவை?

  இவை அனைத்தையும் இப்பாடம் விளக்க முற்படுகிறது.


  இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  வடக்கில் தோன்றிய பௌத்த சமயம்  அசோக மன்னன் காலத்திலேயே தமிழகத்தில் வேர்கொள்ள ஆரம்பித்ததை அறிந்து கொள்ளலாம்.

  பௌத்த சமயப் பள்ளிகள் தமிழகத்தில் சங்க காலத்திலேயே செல்வாக்குடன்  திகழ்ந்தமையை எடுத்துக்காட்டுகளுடன் விவரிக்கலாம்.

  பௌத்த சமயத் துறவியர் மக்களின் தாய்மொழியிலேயே தங்கள் சமயக் கருத்துகளைப் பரப்பியதால் மக்களின் செல்வாக்கைப் பெற முடிந்தது என்பதைச் சுட்டிக் காட்டலாம்.

  பௌத்தத் துறவிகளும் சமணத் துறவியரைப்போலத் தமிழுக்குத் தொண்டாற்றிய வகையினைச் சான்றுகளுடன் விளக்கலாம்.

  பௌத்த சமயம் போற்றி வளர்த்த அறங்களைப் பட்டியலிடலாம்.

  தமிழக நகரங்களில்  பௌத்த மதம் செல்வாக்குப் பெற்றிருந்ததையும் பௌத்த சமயத்  தத்துவத்தில் தேர்ந்த வல்லுநர்கள் பலர் வாழ்ந்ததையும் சான்றுகள் கொண்டு விளக்கலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 11:57:22(இந்திய நேரம்)