தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பௌத்தத்தமிழ்க் காப்பியங்களும் பிறவும்

 • P20236 பௌத்தத்தமிழ்க் காப்பியங்களும் பிறவும்


  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

  மணிமேகலை பௌத்த சமயக் கோட்பாட்டின் ஆவணமாகத் திகழ்வதை விளக்குகிறது.

  கொல்லாமை, ஊன் உண்ணாமை, கள் உண்ணாமை ஆகிய அறங்கள் விரிவாகப் பேசப்படுகின்றன.

  பசிப்பிணி நீக்கலை மிகச் சிறந்த அறமாகப் போற்றுகிறது.

  சிறைக் கோட்டத்தை அறக்கோட்டமாக்கும் சீர்திருத்தச் செயலும் முக்கிய இடம் பெறுகிறது.

  நிலையாமைக் கோட்பாடு ஆங்காங்கே அழுத்தமாகக் கூறப்படுகிறது.

  முழுமையாகக் கிடைக்காத குண்டலகேசி பற்றியும் முழுவதும் மறைந்துபட்ட பௌத்த சமய நூல்கள் சிலவற்றைப் பற்றியும் கிடைக்கின்ற சில குறிப்புகள் மூலம் இந்தப் பாடம் அறிமுகம் செய்கிறது.


  இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  பௌத்த சமயத் தமிழ் நூல்களைப் பட்டியலிடலாம்

  மணிமேகலை போன்று பௌத்த சமயத்தைப் பற்றிய விரிவான நூல் தமிழில் வேறு ஏதுமில்லையென்று அறியலாம்.

  தமிழகத்தில் புத்த பீடிகைகள் அமைந்திருந்த இடங்களைச் சுட்டிக் காட்டலாம்.

  பௌத்த மதமும் பிற இந்தியச் சமயங்கள் போலவே வினைக் கோட்பாட்டில் நம்பிக்கை உடையது என்பதையும் அவரவர் வினைக்கேற்ப மறுபிறவி கிடைக்கும் என்று வலியுறுத்துவதையும் தெரிந்து கொள்ளலாம்.

  கொல்லாமை, ஊன் உண்ணாமை, கள் உண்ணாமை ஆகிய கோட்பாடுகளோடு பசிப்பிணி போக்குதலையும் பௌத்த சமயம் சிறந்த அறமாகப் போற்றியுள்ளதை அறிந்து கொள்ளலாம்.

  பௌத்த சமயம்   தமிழுக்கு ஆற்றிய தொண்டினை வகைப்படுத்தலாம்.

  பௌத்த சமய நூல்கள் சில முழுமையாகக் கிடைக்காமல் போனது பௌத்த சமயத்திற்கும் தமிழ் மொழிக்கும் நேர்ந்த இழப்பு என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 11:57:56(இந்திய நேரம்)