தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Lesson 1 Main-பாட முன்னுரை


  • சென்ற பாடத்தில் பௌத்தம் தமிழகத்தில் கால் பதித்து, வளர்ச்சி பெற்று மேம்பட்டிருந்ததைப் பார்த்தோம். இப்பாடத்தில் பௌத்த சமயக் காப்பியங்களான மணிமேகலை, குண்டலகேசி ஆகியவை பற்றியும் வீரசோழியம் என்ற இலக்கண நூலைப் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.

    பௌத்த சமயத்தினர் எழுதிய நூல்களுள் சில காலத்தால் மறைந்து போயின. நமக்குக் கிடைத்த நூல்களிலும் மணிமேகலைக் காப்பியம் மட்டுமே முழுமையாகக் கிடைத்துள்ளது. மணிமேகலை இல்லையென்றால் தமிழ் இலக்கியத்தில் பௌத்த சமயத்தைப் பற்றிய காப்பியமே இல்லாமல் போயிருக்கும். பௌத்தர்களின் தொண்டும் கணக்கில் வராமல் தமிழின் இழப்பைக் கூட அறிய முடியாமல் போயிருக்கும். மற்றொரு காப்பியமாகிய குண்டலகேசியும் பௌத்த சமயக் காப்பியம்தான் என்றாலும் அதுவும் முழுமையாகக் கிடைக்காமல் போனது தமிழுக்கு நேர்ந்த இழப்பு என்பதை மறுக்க இயலாது.

    ‘பௌத்தத் தமிழ்க் காப்பியங்களும் பிறநூல்களும்’ என்ற இந்தப் பாடத்தில் பௌத்த சமயக் காப்பியங்கள் காட்டும் பௌத்த சமயக் கோட்பாடுகளையும் அந்தச் சமயத்தைச் சார்ந்த பிற நூல்களைப் பற்றிய அறிமுகத்தையும் அறிந்து கொள்ளப் போகிறோம்.

    இனிப் பாடத்திற்குப் போவோமா?

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 11:45:38(இந்திய நேரம்)