தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses-தொகுப்புரை

  • 5.6 தொகுப்புரை

    நண்பர்களே! மேற்கண்ட பகுதிகளின் மூலம் சிறுகதைகள் வெளிப்படுத்தும் தத்துவ நெறிகளை அறிந்திருப்பீர்கள். இப்பாடத்தில் நீங்கள் அறிந்து கொண்ட செய்திகளை மீண்டும் நினைவுபடுத்திப் பாருங்கள்.

    படைப்பாளர் இறையன்பு அவர்களின் சிறுகதைகளில் உலக நெறிகள் வெளிப்படும் விதத்தை மூன்று சிறுகதைகளின் வழி அறிந்து கொள்ள முடிந்தது.

    சிறுகதைகள் கூறும் சான்றோர் நெறிகளின் மூலம் பேருண்மைகளையும் வாழ்க்கைக்கு வழிகாட்டலையும் அறிந்து கொள்ள முடிந்தது.

    சிறுகதைகள் கூறும் வாழ்க்கை நெறிகளின் மூலம் மானிடத் தத்துவங்கள், வாழ்க்கைத் தத்துவங்கள் உணர்த்தப்பட்டு மனித நேயத்துடன் வாழும் வாழ்க்கை வற்புறுத்தப்படுகிறது. இறுதியாக இக்கதைகளின் மூலம் உலக வாழ்வில் தத்துவம் பெறுமிடத்தையும், அதன் முக்கியத்துவத்தையும் அறிய முடிகிறது.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - II

    1.

    தத்துவ நெறிகளின் தேவை எங்ஙனம் உணரப்படுகிறது?

    2.

    தத்துவ நெறியால் விளையும் பயன்கள் இரண்டு கூறுக.

    3.

    இவ்வுலகம் உய்வு பெறுவதற்கான வழி யாது?

    4.

    வாழ்விற்கு வழிகாட்டும் தத்துவ நெறிகளின் பயன்கள் இரண்டினைக் கூறுக.

புதுப்பிக்கபட்ட நாள் : 21-09-2017 16:52:44(இந்திய நேரம்)