தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tamil Education On The Web-ஆசிரியர்; துணைஆசிரியர் தகுதிகள்,கடமைகள்,பொறுப்புகள்

  • பாடம் - 4

    P20424 ஆசிரியர் (Editor);
    துணை ஆசிரியர் (Sub-editor)
    தகுதிகள், கடமைகள், பொறுப்புகள்

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    செய்தித்தாளின் ஆசிரியர் (Editor) மற்றும் துணை ஆசிரியரின் (sub-editor) தகுதிகள், கடமைகள், பொறுப்புகள் ஆகியன பற்றி இப்பாடம் தெளிவாகப் பேசுகிறது.

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    இந்தப் பாடத்தினைப் படிப்பதால் நீங்கள் கீழ்க்காணும் திறன்களையும் பயன்களையும் பெறுவீர்கள்.

    •

    ஒரு செய்தித்தாளின் ஆசிரியர் (Editor) அலுவலகத்தில் ஓர் அணியின் தலைவன் போல, ஒரு கப்பலின் தலைவன் (Captain) போல எவ்வாறு செயல்படுகிறார் என்பதை அறிந்து கொள்வீர்கள்.

    •

    ஆசிரியரின் தகுதிகள், கடமைகள், பொறுப்புகள் பற்றி விவரமாகத் தெரிந்து கொள்வீர்கள்.

    •

    துணை ஆசிரியரின் (Sub-editor) முக்கியத்துவத்தையும் (importance) வகைகளையும் அறிவீர்கள்.

    •

    தலையங்கம் பத்திரிகையின் இதயம் போன்றது. அதனைச் சிறப்பாக எழுதத் துணை ஆசிரியர் எவ்வாறு துணை ஆகிறார் என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.

    •

    துணை ஆசிரியரின் தகுதிகள், கடமைகள், பணிகள் ஆகியன பற்றி அறிந்து கொள்வீர்கள்.

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)