தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

  • 4.3 தொகுப்புரை

    நண்பர்களே! இதுவரை இப்பாடப் பகுதியில் செய்தித்தாளின் ஆசிரியர், துணை ஆசிரியர் ஆகியோர் எவ்வாறு பணிபுரிகிறார்கள் என்பதை அறிந்தீர்கள். பத்திரிகையின் முதுகெலும்பாக இருக்கும் இவர்களின் தகுதிகள், கடமைகள், பணிகள் குறித்து மீண்டும் நினைவு கூர்வது நன்மை பயக்கும்.

    செய்திக் களங்கள், செய்தி மூலங்கள் ஆகியவற்றிலிருந்து செய்திகள் முழுவடிவம் பெறாமல் வந்து சேரும். அவற்றை எல்லாம் சீர்செய்து செய்தியாக மாற்றும் பணியில் பலர் ஈடுபட்டிருந்தாலும் அவர்களை அன்புடன் அணைத்துச் செல்லும் ஓர் அணியின் தலைவன் போல ஆசிரியர் செயல்படுகிறார் என்பதை இப்பாடம் கூறுவதை உணரலாம்.

    பல்வேறு பிரிவுகளில், துணை ஆசிரியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்படும் பணிகளைச் சிறப்பாக முடித்து, பத்திரிகை முன்னேற்றத்தில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது.

    ஆசிரியர், துணை ஆசிரியர் ஆகியவர்களின் தகுதிகள், பணிகள், கடமைகள் ஆகியவற்றை விளக்கமாகவும், தெளிவாகவும் தெரிந்து கொள்ள முடிந்தது.

    தலையங்கம் எழுதும் ஆசிரியர் குழுவில் துணை ஆசிரியர் எவ்வாறு அங்கம் வகிக்கிறார் என்பதையும் கற்க முடிந்தது.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - II

    1.

    துணை ஆசிரியர்கள் எத்தனை வகையினர்?

    2.

    துணை ஆசிரியரின் இரண்டு கடமைகளைக் குறிப்பிடுக.

    3.

    துணை ஆசிரியர்களைப் பற்றி நார்த்கிளிஃப் குறிப்பிடுவது என்ன?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 18-09-2017 13:13:36(இந்திய நேரம்)