தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

செய்தி எழுதுதல்

  • 6.3 செய்திகளை எழுதுதல்

    செய்திகளை எழுதும் போது கீழ்க்குறிப்பிடும் செயல்முறைகளைப் பின்பற்ற வேண்டுவது அவசியமாகும்.

    1)

    செய்திகளை எழுதும் பொழுது எளிய சொற்களைப் பயன்படுத்த வேண்டும். தெளிவற்ற கருத்துகளைக் கூறக் கூடாது.

    2)

    சிக்கலான பொருள்களை வாசகர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எழுத வேண்டும்.

    3)

    தேவைக்கு அதிகமாகச் சொற்களையோ, தொடர்களையோ பயன்படுத்தக் கூடாது.

    4)

    தொடர்புடைய சொற்களையே பயன்படுத்த வேண்டும். நிகழ் காலத்திலோ இறந்த காலத்திலோ செய்திகளை எழுதிக் கொண்டு இருந்தால், அந்தக் காலங்களை மாற்றி எழுதிவிடாமல் கவனமாக எழுத வேண்டும்.

    5)
    எதிர்மறையில் கூறுவதைத் தவிர்க்க வேண்டும்.
    6)

    பெரும்பாலும் செய்வினை வாக்கியங்களாகவே அமைக்க வேண்டும்.

    7)

    அனைவருக்கும் தெரிந்த சொல் சுருக்கங்களையே பயன்படுத்த வேண்டும். உதாரணம் : ஐ.நா.சபை ; ஈ.வெ.ரா போன்றவை.

    8)

    எழுத்துப் பிழைகள், வாக்கியப் பிழைகள் இல்லாமல் எழுத வேண்டும்.

    9)

    எழுதுபவரின் சொந்தக் கருத்தோ, அவரது சுய உணர்ச்சிகளோ, எழுதும் செய்தியில் இடம்பெற்று விடக் கூடாது.

    10)

    செய்திகளைச் சிறு சிறு பத்திகளாக அமைப்பது சாலச் சிறந்தது.

    11)
    துணைத் தலைப்புகள் கொடுத்து எழுதுவது சிறந்தது.
புதுப்பிக்கபட்ட நாள் : 18-09-2017 15:54:29(இந்திய நேரம்)