தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அச்சிடுவதற்குப் பயன்படும் எழுத்துக்கள்

  • 5.7 அச்சிடுவதற்குப் பயன்படும் எழுத்துக்கள்

    அச்சிடுவதற்குப் பல முறைகள் உள்ளதால் அவற்றில் பயன்படுத்தப்படும் பல வகையான எழுத்துகளும் வழக்கத்தில் உள்ளன. அத்தகைய வேறுபட்ட எழுத்துகளின் வகைகள் பற்றியும் இங்கு விளக்கப்படுகிறது.

    5.7.1 அச்சு எழுத்து (Type)

    ஓர் அச்சு எழுத்தை உருவாக்க அச்சுத் துளையீடு வேண்டும். எஃகினாலான இத்தகைய கருவியைக் கொண்டு பித்தளை அல்லது செம்பில் அழுத்தி அச்சுக்கரு செய்யப்படுகின்றது. ஒவ்வொரு எழுத்துக்கும் ஓர் அச்சுக்கரு தேவை. இதனைக் கொண்டு அழுத்தி அச்சு எழுத்து உருவாக்கப்பட்டது. இது பழைய முறை. இந்த முறை காலப்போக்கில் மாறியது. இப்போது உருக்கு இரும்பில் அச்சுத் துளைப்பானால் துண்டு வெட்டப்பட்டு, காய்ச்சி, தண்ணீர் தோய்த்து மென்மைப்படுத்தப்படுகிறது. பிறகு அளவி மூலமும் எழுத்துருவத்தின் முகப்பு குறிக்கப்படும். அடுத்து எழுத்தின் உட்புறப் பகுதியை மாற்றுத் துளைப்பான் மூலம் அடித்து அழுத்தப்படுகின்றது.

    ஓர் எழுத்தின் தேவையற்ற பகுதிகள் அரத்தினால் அராவி விடப்படுகின்றன. எல்லா எழுத்துக்களின் கோடும் (Lines) எழுத்துக்களின் முடிவிலுள்ள முடிக்கப்பட்ட குறுகிய பகுதியும் (Short) ஒரே அளவினதாகச் செய்யப்படும்.

    • அச்செழுத்துக்களின் வகைகள்

    அச்செழுத்துக்கள் பல குடும்பங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குடும்பத்திலும் சிறியது (small), பெரியது (Large), நடுத்தரம் (Medium) என்று எழுத்துக்கள் உள்ளன. ரோமன் (Roman), இத்தாலிக் (Italic), கோதிக் (Gothic) என்ற எழுத்துக்கள் உள்ளன. இவை தவிர நெருக்கிய எழுத்துக்கள் (Condensed), பெரிதான எழுத்துக்கள் (Bold), விரிந்த எழுத்துக்கள் (Extended), நிழலுள்ள எழுத்துக்கள் (Shaded), வரிக்கோட்டு எழுத்துக்கள் (Outline), கையெழுத்து வடிவத் துகள் என்றும் பல வகை அச்செழுத்துகள் உள்ளன.

    5.7.2 புள்ளி முறை (Point System)

    அச்சு எழுத்துக்கள் தொடக்கக் காலத்தில் ஒரே மாதிரியான அளவினதாக செய்யப்படவில்லை. விருப்பம் போல் வெவ்வேறு அளவினதாக செய்யப்பட்டன.

    1937இல் பௌர்ணியர் என்பவர் புதிய அளவில் அச்சு எழுத்துகளை வார்க்கத் தொடங்கினார். இந்த அளவிற்கு பைகா (Pica) என்று பெயர். பைகாவை அடிப்படையாகக் கொண்டு அதை 12 பாகங்களாகப் பிரித்தார். ஒவ்வொரு சிறு பகுதியையும் புள்ளி (Point) என்று அழைத்தார். இம்முறை
    1898 வரை பழக்கத்தில் இருந்தது. 1898க்குப் பிறகு அமெரிக்கர்கள் புள்ளி முறையைக் கொண்டு வந்தனர். இதற்கு அமெரிக்கப் பைகா (12 புள்ளி) என்று பெயர். ஒர் அங்குலத்தில் 72 புள்ளிகள் இருக்கும்

புதுப்பிக்கபட்ட நாள் : 20-09-2017 10:30:26(இந்திய நேரம்)