Primary tabs
-
5.5 படங்களைப் பதிப்பிக்கும் முறை
தொடக்கக் காலங்களில் மரத்திலும் கல்லிலும் செதுக்கப்பட்டுப் படங்கள் பதிப்பிக்கப்பட்டன. இப்படப் பதிவுக்கு இன்றைய நவீன காலத்தில் பல்வேறு முறைகள் கையாளப்படுகின்றன. அவை:
1)மரத்தைச் செதுக்கிப் பதிப்பது (Wood cutting method)
2)உலோகத்தைச் செதுக்கிப் பதிப்பது (metal engraving method)
3)அரித்தல் முறை (Etching method)
4)எழுத்தச்சுப் படிமை முறை (Lithography method)
என்பன படப்பதிவில் கையாளப்படுகிற முறைகளாகும்.
மேற்கண்ட பழைய முறைகளைத் தவிர இன்று வளர்ந்து வருகிற அறிவியல் வளர்ச்சியால் படப்பதிவிற்குப் பல்வேறு அதிநவீன முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அவை:
1)புகைப்பட எழுத்தச்சுப் படிமை முறை (Photo Lithography)
2)தொய்வகப் பதிப்பு முறை (Leno cuts)
3)ஆப்செட் பதிவு முறை (Offset process)
4)புகைப்படப் பதிவு முறை (Photograving)
போன்ற பல்வேறு முறைகளும் படப்பதிவு முறையில் கையாளப்படுகின்றன. படப்பதிப்புகள் இவ்வாறு பல்வேறு முறைகளில் அமைக்கப்பட்டாலும் இப்பதிப்புகள் கோக்கப்பட்ட செய்திகளின் அகல, உயரத்திற்கேற்பப் பக்க அமைப்பிற்குப் பொருத்தமாக அமைக்கப்படும். தேவையான அடிக்குறிப்பு விளக்கத்துடன் படங்கள் பதிப்பிக்கப்படுகின்றன.