Primary tabs
-
2.6 தொகுப்புரை
அன்பு நிறை மாணவர்களே! கற்பியல் என்ற இந்தப்
பாடத்தின் வழியாக பழந்தமிழர்களின் கற்பு (குடும்ப) வாழ்க்கை
பற்றிய செய்திகளை நீங்கள் விளக்கமாக அறிந்திருப்பீர்கள் என
நம்புகி்றேன். இப்பாடச் செய்திகளை இல்வாழ்க்கை, பிரிவு என்ற
இரண்டு தலைப்புகளில் கருத்தில் கொண்டால் பாடச் செய்திகள்
நினைவில் நிற்கும். இப்பாடத்தில் இடம்பெற்றுள்ள சில முக்கிய
செய்திகள் பின்வருமாறு:- கற்பின் கிளவித் தொகை ஏழு.
- இல்வாழ்க்கையின் வகை நான்கு.
- இல்வாழ்க்கையின் விரி பத்து.
- பிரிவு ஆறு வகைப்படும்.
- பரத்தையர் பிரிவு நான்கு வகைப்படும்.
- உணர்த்த உணரும் ஊடற் கிளவிகள் பதினொன்று.
- உணர்த்த உணரா ஊடற் கிளவிகள் பதினான்கு.
- கற்பின் கிளவித் தொகை ஏழு.