தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A03124 : குடியியல்

  • A03124 : குடியியல்

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?


        நல்ல குடியில் பிறந்தாரிடம் பிறரோடு இனிமையாகப் பழகும்
    எளிமை உண்டு; மானத்தைக் காப்பாற்றத் தம் உயிரையும்
    விடும் தன்மை உள்ளது; தன்குடியை ஆளுமை செய்யும்
    ஆற்றலும் இருக்கின்றது; இவை போன்ற நற்குடிமாந்தரின்
    இயல்புகளைப் பற்றிய வள்ளுவரின் வாழ்வியல் தத்துவங்கள்
    இப்பாடத்தில் இடம் பெறுகின்றன.

        நல்ல குடியில் பிறந்தவன், குற்றம் இல்லாதவனாக இருந்து,
    தன் உழைப்பினால் கிடைப்பவற்றை இனிதே சேர்த்து,
    தேவைக்கு ஏற்ப உதவி செய்வான் என்பதையும் கூறுகிறது.

        நல்ல குடியிலுள்ளோர், ஆடவரானாலும் கற்போடு ஒழுக
    வேண்டும், பணிவுடன் இருக்க வேண்டும் என்பதையும்
    குறிப்பிடுகிறது.

        நல்ல குடியில் பிறந்தவர், இழுக்கு அளிப்பனவற்றையும்,
    பண்பில்லாதனவற்றையும் செய்யமாட்டார்கள் என்பதையும்
    கூறுகிறது.

        நல்ல குடியில் பிறந்தோர் சிறுகுற்றம் செய்தாலும் அது
    நிலவின் கறைபோல் எல்லோர் கண்ணிலும் புலப்படும் என்று
    வள்ளுவர் படம் பிடித்தும் காட்டும் தத்துவத்தின் விளக்கம்
    இடம் பெறுகிறது.


    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன்
    பெறலாம்?


    • நல்ல குடியில் பிறந்தோரிடம் எத்தகைய இயல்புகள்
      பொருந்தியிருக்கும் என்பதனை அறிந்து கொள்வீர்கள்.
    • நல்ல குடியில் பிறந்தோர், தவறு செய்யாமல்இருப்பதையும்,
      தனது உழைப்பிற்குச் சிறப்பு கொடுப்பதையும், குறிப்பறிந்து
      உதவுவதையும் தெரிந்து கொள்வீர்கள்.
    • நல்ல குடிப்பிறந்தோர் ஆண்மகனாயினும் கற்புடனும்,
      பணிவுடனும் இருப்பதைத் தம்     கடமையாகக்
      கொண்டுள்ளனர் என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.
    • நல்ல குடியில் பிறந்தோர் சிறு தவறு செய்யினும்,
      நற்குடிப்பண்பாகிய அன்பைக் காட்டத் தவறினும், அவை
      எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பனவற்றையும்
      அறிந்து கொள்வீர்கள்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 14:56:01(இந்திய நேரம்)