தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A03126 : வள்ளுவர் வாழ்கிறார்

  • A03126 : வள்ளுவர் வாழ்கிறார்

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?


        இறைவனைப் பற்றியும், உயிரைப்பற்றியும் உலகத்தைப்
    பற்றியும் கூறப்படும் தத்துவக் கருத்துகள் காலம் கடந்து
    வாழ்பவை. இவை பற்றிய வள்ளுவரின் கருத்துகள் இந்தப்
    பாடத்தில் இடம் பெற்றுள்ளன.

        பொதுமைக் கூறுகளாகிய, வாய்மை, ஒழுக்கம், அன்பு
    ஆகியவை பற்றி வள்ளுவர் கூறும் கருத்துகள் இங்கே
    கூறப்பட்டுள்ளன.

        எல்லோருக்கும், எல்லாக் காலத்திலும் பொருந்துகின்ற, அறிவு,
    தகுதி, முயற்சி ஆகியவை பற்றி வள்ளுவரின் கருத்துகள்
    எடுத்துரைக்கப்பட்டுள்ளன. இயற்கையாக அமைந்திருக்கும்,
    மழை, காலம் என்பவை எத்தகைய நன்மைகளையும்
    தீமைகளையும்     விளைவிக்கின்றன     என்பவையும்
    சொல்லப்பட்டுள்ளன.


    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன்
    பெறலாம்?


        இறைவன், உயிர், உலகம் பற்றி வள்ளுர் கூறும் கருத்துகள்
    இன்றைக்கும் ஏற்றுக் கொள்ளத் தகுந்தவையாக இருப்பதை
    அறிந்து கொள்வீர்கள்.

        வாய்மையைப்     பற்றியும்,     அன்பைப்     பற்றியும்,
    ஒழுக்கத்தைப்பற்றியும் வள்ளுவர் கூறுவனவற்றுள் காணப்படும்
    பொதுமைத் தன்மையைப் புரிந்து கொள்வீர்கள். அறிவு
    என்றால் என்ன என்பதையும், எதன் அடிப்படையில் ஒரு
    பணியைப் பிறரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதையும்,
    முயற்சி எந்த அளவுக்குப் பயன்தரும் என்பதையும் தெரிந்து
    கொள்வீர்கள்.

        இயற்கையின் கூறுகளாகிய மழை, நன்மையும் தீமையும்
    வழங்கும் தன்மை உடையது. காலம் கருதி செயல்பட்டால்
    நினைத்த செயலை முடிக்க முடியும். இத்தகைய
    உண்மைகளையும் அறிந்து கொள்வீர்கள். மேலும் தாம் கூறிய
    கருத்துகளால் வள்ளுவர் இன்று வரை எந்த அளவுக்கு
    வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதையும் உணர்ந்து
    கொள்வீர்கள்

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 14:59:00(இந்திய நேரம்)