Primary tabs
-
A03121 : காதல் வாழ்க்கை
இப்பாடத்தை நீங்கள் படித்து, இதில் உள்ள கற்றல்
செய்கைகளை முழுமையாகச் செய்வீர்களானால், கீழ்க்காணும்
திறன்களையும், பயன்களையும் பெறுவீர்கள்:
(அ)
1. தமிழ் அக இலக்கிய மரபில் வழங்கும் அகம், களவு,
கற்பு, தலைவன், தலைவி, பிரிவு, ஊடல், கூடல், பசலை,
கூற்று போன்ற சொற்களை அவற்றின் பொருளுணர்ந்து
பயன்படுத்தல்.
2. பண்டைய அக இலக்கிய மரபின் கூறுகளை விவரித்தல்.
3. வள்ளுவத்தில் அக இலக்கிய மரபு கையாளப்
பெற்றிருப்பதை விளக்குதல்.
(ஆ)
பாடத்தில் எடுத்தாளப்பட்டிருக்கும் குறள்களைக்
கூற்றுவகையாகப் பகுத்தல்.
(இ)
சிந்தனை வளம் கொண்ட கருத்தை எடுத்துச் சொல்லும்
முறை - இவற்றின் நோக்கில் குறளின் இலக்கிய நயம்
எடுத்துரைத்தல்.
(ஈ)
தமிழர் பண்பாட்டில் காதல் வாழ்க்கைக்குத்
தரப்பட்டிருக்கும் சிறப்பினை எடுத்து இயம்புதல்.
(உ)
காதல் வாழ்க்கை சிறக்க வள்ளுவர் கூறும் நெறிகளை
விளக்குதல்.