தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பகுதி 6.0-பாட முன்னுரை

  • 6.0 பாட முன்னுரை


        பழங்காலம் முதல் அறநெறியாளர்கள் பலர் தோன்றி
    மறைந்துள்ளனர். ஆனால் ஒரு சிலரே இன்றும் மக்களிடையே
    பேசப்படுகின்றனர். அவர்களின் அறக்கருத்துகளே இன்றும்
    நினைக்கப்படுகின்றன. இதற்கு என்ன காரணம்? இவர்கள் கூறியுள்ள
    கருத்துகள் இன்றும் பொருந்துகின்றன, பயன் தருகின்றன.

        வள்ளுவர் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர். இன்றும்,
    அவரையும் அவர் கூறிய அறநெறிக் கருத்துகளையும் மக்கள்
    பாராட்டுகின்றனர். காரணம், அவை இன்றும் பொருந்துகின்றன;
    பயன்தருகின்றன. எனவே, அவர் கருத்துகளுக்கு இன்றும் வாழ்வு
    இருக்கிறது. தம் கருத்துகளால், மக்களிடையே இன்றும் வள்ளுவர்
    வாழ்கிறார். அவரது கருத்துகள் எவ்வாறு பொருத்தம்
    உடையனவாகத் திகழ்கின்றன, வள்ளுவர் எவ்வாறு மக்கள்
    உள்ளத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பவை பற்றிய
    கருத்துகள் இப்பாடத்தில் இடம் பெறுகின்றன.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 14:58:28(இந்திய நேரம்)