Primary tabs
-
இன்றைய நிலையில் வளர்ந்துள்ள அறிவியல் கருத்துகள்
பலவற்றை வள்ளுவர், அறிவுரையாகவும், கருத்தாகவும்
திருக்குறளில் பயன்படுத்தியுள்ளார். சில அறிவியல் உண்மைகளை
உவமையாகவும் பயன்படுத்தியுள்ளார்.இன்றைக்கும் பயன்படுத்தும் மருத்துவ முறைகளாகிய நோயை
அறிதல், அதற்குரிய காரணங்களை அறிதல், நோயை நீக்குவதற்கு
உரிய வழிமுறைகளை அறிதல், அறிந்து கொண்ட வழிமுறைகளைச்
செயல்படுத்த அறிதல் ஆகிய அடிப்படைகளை வரிசை முறை கூட
மாறாமல் கூறியிருக்கிறார்.மேற்குறிப்பிட்ட நான்கு முறைகளோடு, மருத்துவத்தின் நான்கு
பகுதிகளாகிய, நோயாளி, மருத்துவன், மருந்து, மருத்துவனுக்கு
உதவி செய்பவன் ஆகியவை பற்றிக் குறிப்பிடுகிறார்.உடலுக்கு ஒவ்வாத உணவை உண்ண வேண்டாம், அளவுக்கு
மிகுதியான உணவையும் உண்ண வேண்டாம். உண்ட உணவு
செரித்த பின்னர் உண்ணுங்கள் என மருத்துவ அறிவுரைகளையும்
வழங்குகிறார்.நீர் வளத்திற்குக் காரணமான மழையைப் பற்றியும், பயிரிடுதலில்
உரத்தை எவ்வாறு இட வேண்டும் என்பது பற்றியும் தம்
கருத்துகளை வெளியிட்டுள்ளார்.மக்களின் உள்ள ஊக்கத்தின் அளவைக் கூற வந்த வள்ளுவர்,
தான் சார்ந்திருக்கும் நீர் நிலையத்தின் நீர் மட்டத்திற்கு ஏற்ப,
தானும் மிதந்து நிற்கும் அல்லி இனத்தைச் சார்ந்த தாவரத்துடன்
ஒப்பிடுகிறார்.அன்பில்லாதவர்களை அறம் எவ்வாறு தண்டிக்கம் என்பதற்கு
எலும்பு இல்லாத புழு பூச்சிகள் வெயிலின் வெம்மையால் துன்பம்
அடைவதை ஒப்பிடக்கூறுகிறார்.ஒரு நிலத்தின் தன்மையை, அந்நிலத்தில் முளைத்து வளரும் பயிர்
எவ்வாறு புலப்படுத்துமோ, அவ்வாறு நல்ல குடியில்
பிறந்தோர்களின் வாய்ச் சொல் அவர்களது இயல்பைச் சுட்டிக்
காட்டும் என்று குறிப்பிடுகிறார்.தன் பக்கத்திலுள்ள பொருளை எதிர் ஒளிப்பினதாகக் காட்டும்
கண்ணாடி போல் உள்ளக்கருத்தை முகம் காட்டும் என்கிறார்.எல்லா அறிவியலுக்கும் தாயாக விளங்கும் கணிதவியலைப்
பற்றிக் குறிப்பிடுகிறார். குறிப்பாக எண்ணின் இன்றியமையாததை
விளக்குகிறார்.உண்மையை நாடுதல் என்னும் அறிவியல் அணுகுமுறையையும்
குறிப்பிடுகிறார்.இவ்வாறு பல அறிவியல் உண்மைகளை, அறிவுரையாகவும்,
கருத்தாகவும், உவமையாகவும், வள்ளுவர் கூறுகிறார்.