26 வஞ்சி
மாநகர் புக்க காதை
[
மணிமேகலை கண்ணகிக்கோட்டம் அடைந்து
வஞ்சிமாநகர்
புக்க பாட்டு ]
அணியிழை
அந்தரம் ஆறா எழுந்து
தணியாக்
காதல் தாய்கண் ணகியையும்
கொடைகெழு
தாதை கோவலன் தன்னையும்
கடவுள் எழுதிய
படிமம் காணிய
வேட்கை துரப்பக்
கோட்டம் புகுந்து
வணங்கி
நின்று குணம்பல ஏத்தி
அற்புக்கடன்
நில்லாது நல்தவம் படராது
கற்புக்கடன்
பூண்டு நும்கடன் முடித்தது
அருளல் வேண்டும்என்று
அழுதுமுன் நிற்ப
ஒருபெரும்
பத்தினிக் கடவுள்ஆங்கு உரைப்போள்
எம்இறைக்கு
உற்ற இடுக்கண் பொறாது
வெம்மையின்
மதுரை வெவ்வழல் படுநாள்
மதுரா பதிஎனும்
மாபெருந் தெய்வம்
இதுநீர் முன்செய்
வினையின் பயனால்
காசுஇல் பூம்பொழில்
கலிங்கநல் நாட்டுத்
தாய மன்னவர்
வசுவும் குமரனும்
சிங்க புரமும்
செழுநீர்க் கபிலையும்
அங்குஆள்
கின்றோர் அடல்செரு உறுநாள
மூஇரு காவதம்
முன்னுநர் இன்றி
யாவரும்
வழங்கா இடத்தில் பொருள்வேட்டுப்
பல்கலன்
கொண்டு பலர்அறி யாமல
எல்வளை
யாளோடு அரிபுரம் எய்திப்
பண்டக்
கலம்பகர் சங்கமன் தன்னைக்
கண்டனர்
கூறத் தையல்நின் கணவன்
பார்த்திபன்
றொழில்செயும் பரதன் என்னும்
தீத்தொழி
லாளன் தெற்றெனப் பற்றி
ஒற்றன் இவன்என
உரைத்து மன்னற்குக்
குற்றம்இ
லோனைக் கொலைபுரிந் திட்டனன்
ஆங்குஅவன்
மனைவி அழுதனள் அரற்றி
ஏங்கிமெய்
பெயர்ப்போள் இறுவரை ஏறி
இட்ட சாபம்
கட்டியது ஆகும்
உம்மை வினைவந்து
உருத்தல்ஒழி யாதுஎனும்
மெய்ம்மைக்
கிளவி விளம்பிய பின்னும்
சீற்றம்
கொண்டு செழுநகர் சிதைத்தேன்
மேல்செய்நல்
வினையின் விண்ணவர்ச் சென்றேம்
அவ்வினை
இறுதியின் அடுசினப் பாவம்
எவ்வகை யானும்
எய்துதல் ஒழியாது
உம்பர்
இல்வழி இம்பரில் பல்பிறப்பு
யாங்கணும்
இருவினை உய்த்துஉமைப் போல
நீங்குஅரும்
பிறவிக் கடலிடை நீந்திப்
பிறந்தும்
இறந்தும் உழல்வோம் பின்னர்
மறந்தும்
மழைமறா மகதநல் நாட்டுக்கு
ஒருபெருந்
திலகம்என்று உரவோர் உரைக்கும்
கரவுஅரும்
பெருமைக் கபிலையம் பதியின்
அளப்புஅரும்
பாரமிதை அளவின்று நிறைத்துத்
துளக்கம்இல்
புத்த ஞாயிறு தோன்றிப்
போதி மூலம்
பொருந்திவந் தருளித்
தீதுஅறு நால்வகை
வாய்மையும் தெரிந்து
பன்னிரு
சார்பின் பகுதித் தோற்றமும்
அந்நிலை
எல்லாம் அழிவுறு வகையும
இற்றுஎன
இயம்பிக் குற்றவீடு எய்தி
எண்அரும்
சக்கர வாளம் எங்கணும்
அண்ணல்
அறக்கதிர் விரிக்கும் காலைப்
பைந்தொடி
தந்தை யுடனே பகவன
இந்திர
விகாரம் ஏழும்ஏத் துதலின்
துன்பக்
கதியில் தோற்றரவு இன்றி
அன்புஉறு மனத்தோடு
அவன்அறம் கேட்டுத்
துறவி உள்ளம்
தோன்றித் தொடரும்
பிறவி நீத்த
பெற்றியம் ஆகுவம்
அத்திற மாயினும்
அநேக காலம்
எத்திறத்
தார்க்கும் இருத்தியும் செய்குவம்.
நறைகமழ்
கூந்தல் நங்கை நீயும்
முறைமையின்
இந்த மூதூர் அகத்தே
அவ்வவர்
சமயத்து அறிபொருள் கேட்டு
மெய்வகை
இன்மை நினக்கே விளங்கிய
பின்னர்ப்
பெரியோன் பிடகநெறி கடவாய்
இன்னதுஇவ்வி
யல்புஎனத் தாய்எடுத்து உரைத்தலும்,
இளையள்
வளையோள் என்றுஉனக்கு யாவரும்
விளைபொருள்
உரையார் வேற்றுஉருக் கொள்கென
மைஅறு சிறப்பின்
தெய்வதம் தந்த
மந்திரம்
ஓதிஓர் மாதவன் வடிவாய்த்
தேவ குலமும்
தெற்றியும் பள்ளியும்
பூமலர்ப்
பொழிலும் பொய்கையும் மிடைந்து
நல்தவ முனிவரும்
கற்றுஅடங் கினரும்
நல்நெறி
காணிய தொல்நூல் புலவரும்
எங்கணும்
விளங்கிய எயில்புற இருக்கையில்,
செங்குட்
டுவன்எனும் செங்கோல் வேந்தன்
பூத்த வஞ்சி
பூவா வஞ்சியில்
போர்த்தொழில்
தானை குஞ்சியில் புனைய
நிலநாடு எல்லைதன்
மலைநாடு என்னக்
கைம்மலைக்
களிற்றுஇனம் தம்முள் மயங்கத்
தேரும் மாவும்
செறிகழல் மறவரும்
கார்மயங்கு
கடலின் கலிகொளக் கடைஇக்
கங்கையம்
பேர்யாற்று அடைகரைத் தங்கி
வங்க நாவியின்
அதன்வடக்கு இழிந்து
கனக விசயர்
முதல்பல வேந்தர்
அனைவரை வென்றுஅவர்
அம்பொன் முடிமிசைச்
சிமையம்
ஓங்கிய இமைய மால்வரைத்
தெய்வக்
கல்லும் தன்திரு முடிமிசைச்
செய்பொன்
வாகையும் சேர்த்திய சேரன்
வில்திறல்
வெய்யோன் தன்புகழ் விளங்கப்
பொன்கொடிப் பெயர்ப்படூஉம்
பொன்நகர்ப் பொலிந்தனள்
திருந்துநல்
ஏது முதிர்ந்துளது ஆதலின்
பொருந்துநால்
வாய்மையும் புலப்படுத் தற்குஎன்.
வஞ்சி மாநகர் புக்க காதை முற்றிற்று.