முகப்பு

2.4 உள்ளடங்கிய கல்வியும் கற்பித்தல் முறைகளும்

உள்ளடங்கிய கல்வியும் கற்பித்தல் முறைகளும்

உள்ளடங்கிய கல்வியும், அதன் கற்பித்தல் முறைகளும் விளக்கப்படுகின்றன.

’உள்ளடக்கிய கல்வி’ அல்லது ‘அனைவருக்குமான கல்வி’ என்பதற்கு, குறைபாடுகள் உடையோரையும் உள்ளடக்கிய அனைத்து மாணவர்களும், அருகாமையில் உள்ள முறையான பள்ளிகளில், அவரவர் வயதுக்கு ஏற்ற வெஉப்புகளில் சேர்ந்து, ஒன்றாகப் பயிலவும், பள்ளி வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் பங்கேற்றிடவும், பங்களிப்பு செய்திடவும் தேவைப்படும் வசதி வாய்ப்புகள் அளிக்கப்பட்டிருத்தல் என்று பொருள் உரைக்கப்படுகிறது. அதாவது, அனைத்துவகை மாணவர்களும் [பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளானோர் மற்றும் செயலாற்றல் குறைபாடு உடையோர் உட்பட] ஒன்றாகப் பயிலும் வகையில், பள்ளிகளில் அவற்றின் வகுப்பறைகள், செயல்திட்டங்கள், பல்வேறு செயல்பாடுகள் ஆகியவற்றை வடிவமைத்தலையே ‘உள்ளடக்கிய கல்வி’ என்பது குறிக்கிறது.

குறிப்பிட்டுக் கூறவேண்டுமானால், ‘உள்ளடக்கிய கல்வி’ என்னும் அணுகுமுறையில் சிறப்புத்தேவைகள் கொண்ட குறைபாடுடைய மாணவர்கள், பள்ளிநேரம் முழுவதையும் அல்லது அதன் பெரும்பகுதியை, குறைபாடுகள் ஏதுமற்ற மாணவர்களோடு நேர்ந்தே கழிக்கின்றனர்.

'உள்ளடக்கிய கல்வி' என்பதற்கு யுனஸ்கோ அளித்துள்ள வரையறை வருமாறு:

'அனைத்துத் தரப்பினையும் உள்ளடக்கியிருத்தல்' என்னும் செயல்முறை, அனைத்து கற்போரது பல்வகைத் தேவைகளையும் கருத்தில் கொண்டு அவற்றிற்குத் தீர்வு காண்பதற்கு கற்றல், பண்பாட்டு மற்றும் சமுதாய நிகழ்வுகளில் அவர்களது பங்கேற்பையும், பங்களித்தலையும் அதிக்கரித்தோடு, கல்வியினுள்ளும் கல்வியிலிருந்தும் அவர்கள் புறந்தள்ளப்படுதலைக் குறைத்திடுவதும் ஆகும்.

பின்வருபவை, உள்ளடக்கிய கல்வியின் முக்கிய கோட்பாடுகளாகும்.

• நட்புணர்ச்சியுடன் சேர்ந்திருத்தல் கோட்பாடு

இது, ஒரு பொதுவான கல்விச் சமுதாயத்தில், அனைத்துக் குழந்தைகள்யும் ஒரு சேர இணைத்திடும் அணுகுமுறையைக் குறிக்கிறது.

• சமத்துவக் கோட்பாடு

இக்கோட்பாடு, “ஒவ்வொருவரும் அறிவு, திறன்கள் மற்றும் தகவல்களைப் பெறுவதற்கு சம உரிமை பெற்றவர்கள்” என்பதை வலியுறுத்துகிறது.

• பங்கேற்றல் கோட்பாடு

இக்கோட்பாடு, கற்பித்தல் - கற்றல் செயல்முறையில் அனைத்து செயலாற்றல் குறைபாடுடைய குழந்தைகளும், இயல்பான குழந்தைகளுக்கு சம்மாக, துடிப்புடன் பங்கேற்க வாய்ப்பளிக்கிறது.

• ஏற்றுக்கொள்ளும் கோட்பாடு

அனைத்து குழந்தைகளும், அவர்கள் நலிந்த பிரிவு மற்றும் விளிம்புநிலையில் உள்ளோரின் குழந்தைகளாகவோ அல்லது செயலாற்றல் குறைபாடுடைய குழந்தைகளாகவோ, யாராக இருப்பினும், அவர்கள் ஒவ்வொருவரும் பொதுப்பள்ளி வகுப்பறைகளில் சேர்ந்து பயில்வது, ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளிடம் அக்கறை கொண்டவர்களால் ஏற்கப்பட்டு, வரவேற்கப்படல் வேண்டும்.

• சிறப்பு வகுப்பறைகள் நிராகரிக்கப்படும் கோட்பாடு

வழக்கமான பொதுப்பள்ளிகளில் செயலாற்றல் குறைபாடுடையோருக்கு கல்வி அளிப்பதற்கான சிறப்பு வகுப்பறைகளையும், குறிப்பிட்ட செயலாற்றல் குறைபாடுக்கான பள்ளிகளையும் அமைத்தலை நிராகரித்திடுவதை இக்கோட்பாடு வலியுறுத்துகிறது. அவை பாகுபாட்டை பறைசாற்றுவதாகவும், ஊக்குவிப்பதாயும் உள்ளன.

• தனியாள் வேற்றுமைகள் கோட்பாடு

ஒவ்வொரு குழந்தையும் வெவ்வேறானவை என்றும். தனித்தன்மையுடையவை என்றும் உள்ளடக்கிய கல்விக்கோட்பாடு வலியுறுத்துகிறது; எனவே பல்வகை வகுப்பறைக் கற்பித்தல் முறைகளும், கற்பித்தல் பொருட்கள், கற்றல் தேர்ச்சியை மதிப்பிடும் நுட்பங்கள், மாணவர் கற்பித்தலுக்கு உதவியளித்திடும் சேவைகள் மற்றும் தொடர்புடைய வசதிகள் ஆகியவையும் தேவைப்படுகின்றன. இவ்வாறாக குழந்தைகளிடம் உள்ள தனிநபர் வேற்றுமைகள் உணரப்பட்டு, அவற்றிற்கு குழந்தைகளின் கற்றல் சூழலில் முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றன.

• விலக்கி வைத்தலுக்கு எதிரானது

’உள்ளடக்கியிருத்தல்’ என்பது ‘விலக்கி வைத்தலுக்கும்’, பாகுப்படுத்துதலுக்கும், ஏதோ ஒரு காரணத்தின் அடிப்படையில் ஒதுக்கி வைத்தலுக்கும் எதிரானதாகும். செயலாற்றல் குறைபாடுடைய அல்லது கற்றலுக்கு ஏதேனும் சிறப்புத் தேவை வேண்டியிருக்கும் குழந்தைகள் அனைவரும், இயல்பான குழந்தைகளோடு சேர்ந்து கல்வி பெறவும், தரமான கல்வியைப் பெற்றிடுவதற்கான சம வாய்ப்புகளையும் அளித்திடல் வேண்டும் என்று, இக்கோட்பாடு கூறுகிறது.

• 'மாற்றம்' கோட்பாடு

உள்ளடக்கிய கல்வி என்பது, குழந்தைகளின் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் கல்வி அமைப்பை மாற்றிட வேண்டுமேயொழிய, கல்வி அமைப்புக்கு ஏற்ப குழந்தைகளை மாற்ற முயற்சிப்பத்தல்ல என்னும் கோட்பாடு அடிப்படையில் அமைந்ததாகும்.

மேற்கூறிய கோட்பாடுகள், அனைத்து குழந்தைகளும் அவர்களது சாதி, மதம், நிறம், பாலினம் மற்றும் செயலாற்றல் குறைபாடுகளை கருத்தில் கொள்ளாமல், ஒரே மாதிரியான பள்ளிகளில் ஒன்று சேர்ந்து கற்கவும், தரமான கல்வியைப் பெறுதலையும், உறுதி செய்திட முயற்சிகின்றன.

உள்ளடக்கிய கல்வி அணுகுமுறை(IE) என்பது, ஒரே கூரையின் கீழ் அமைந்த பள்ளி வகுப்பறையில் செயலாற்றல் குறைபாடுடைய குழந்தைகளுக்கும், கற்றல் குறைபாடுடைய குழந்தைகளுக்கும் இயல்புநிலையில் உள்ள குழந்தைகளுடன் ஒன்றாக கற்பிப்பதாகும். இவ்வணுகுமுறை, அனைத்துவகைக் குழந்தைகளது கற்றல் தேவைகளை, குறிப்பாக விளிம்புநிலைக்குத் தள்ளப்படுவதற்கும், ஒதுக்கி வைத்தலுக்கும் ஆளாகக்கூடிய அபாயமுள்ள குழந்தைகளது கற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அதிக கவனம் செலுத்துகிறது. இதனால் அறியப்படுவது யாதெனில், செயலாற்றல் குறைபாடுகள் உடைய மற்றும் எவ்வித குறைபாடுகளும் இல்லாத குழந்தைகள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து, பள்ளி முன் வகுப்புகளுக்கான ஏற்பாடுகள், பொருத்தமான கற்றலுக்கு உதவிடும் சேவைகள் மற்றும் வசதிகளைக் கொண்ட சாதாரண பள்ளிகள் மற்றும் சமுதாய கல்விச்சூழல் ஆகியவற்றின் மூலம் கற்றல் என்பதாகும். சுருங்கக்கூறின், பல்வகைப்பட்ட கற்போரின் தேவைகளை உள்வாங்கிக் கொண்டு, அவற்றை நிவர்த்தி செய்யும் வகையில், நெகிழ்வுத்தன்மை கொண்ட கல்வி அமைப்பில்தான், ‘உள்ளடக்கிய கல்வி’ என்பது சாத்தியமாகும்.

  1. இக்கல்வி முறையானது கற்றலை எளிதாக்கி, வரவேற்கத்தக்கதாகவும், சமுதாயத்தில் அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும், பயனளிக்க கூடியதாகவும் அமைகிறது.
  2. எவ்வவையான கற்போரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் நெகிழ்வுத்தன்மை கொண்டதாக இக்கல்வி முறை உள்ளது.
  3. இக்கல்விமுறையின் மூலம் ஏதோ ஒரு காரணத்தால் பள்ளியை விட்டு விலகிய மாணவர்கள் இயல்பான மாணவர்களுடன் சேர்ந்து கல்வி கற்கும் வாய்ப்பினைப் பெறுகின்றனர்.
  4. இயலாமையுடைய குழந்தைகளும் கற்பதற்கு ஊக்குவிக்கப்படுகின்றனர்.
  5. தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவும், பிரச்சனைகளையும் சவால்களையும் எதிர்கொள்ளவும், சகமாணவர்களின் உதவியுடன் கற்கவும் இக்கல்விமுறை பெரிதும் துணைபுரிகிறது.

பலவவையான - வேறுப்பட்ட கற்றல் திறன்கள் கொண்ட மாணவர்களைச் சிறந்த முறையில் சென்றடைகின்ற வகையில் பலவிதமான கற்பித்தல் முறைகளை உள்ளடக்கக்கல்வி வகுப்பறைகளில் ஆசிரியர்கள் பயன்படுத்த வேண்டும். சாதாரண வகுப்பறையில் அமரவைக்கப்படும் மாணவர்களுக்கு இது பயன்தருவதாகும். ஏனெனில் கற்றலில் அவர்களுடைய ஈடுபாட்டையும் இது அதிகரிக்கிறது. மாணவர்கள் அனைவரின் பதிலை அல்லது வினைகளை வலியுறுத்தும் ஒரு சூழ்நிலையிலிருந்து அறிவுமிகு குழந்தைகளும், விரைந்து கற்கும் குழந்தைகளும் கூட பயன்பெறுவார்கள். மிகவும் முக்கியமாகக், உள்ளக்கக் கல்வி வகுப்பறைகளில் வேறுபாடுகள் பற்றி வெளிப்படையான, மனந்திறந்த உரையாடல்கள் நடைமுறை ஊக்குவிக்கப்படுகிறது. மேலும் மாற்றுத்திறன் படைத்தோரின் திறன்கள், அவர்களுடைய பண்பாட்டுப் பின்னணிகள், தேவைகள் ஆகியன மதிக்கப்படுகின்றன. பல நன்மைகள் இருந்தபோதிலும் உள்ளடக்கியக்கல்விக்கு பல தடைகள் முட்டுக்கட்டைகள் இருக்கின்றன. இவற்றை உள்ளடக்கியக்கல்வி எனும் தலைப்பில் UNESCO நிறுவனம் கோடிட்டுக் காட்டியுள்ளது. அவை பின்வருனவாகும்.

• மனபான்மை

உள்ளடக்கக்கல்விக்கு சமுதாயக் கோட்பாடுகள் மிகப்பெரும் தடைகளாகவுள்ளன. முரட்டுத்தனமானவை உடல் பழைய ஊனமுற்ற, கற்றல் பல நேரங்களில் மனப்பான்மைகள் குறைபாடுள்ள மாணவர்களையும், சிறுபான்மை பண்பாட்டைச் சேர்ந்தவர்களையும் சேர்த்துக்கொள்வதை பலர் எதிர்க்கின்றனர். மாற்றுத்திறனாளிகளுக்கு காண்பிக்கப்படும் சில சலுகைகள், சார்புகள் (மாணவர்களிடையே) பாகுபாடுதலை உருவாக்கலாம். இதனால் கல்விப்பணிகள் தடைப்படுகின்றன. கல்வி முறையிலுள்ள குறைபாடுகளுக்கு பதிலாக உள்ளடக்கக்கல்வியின் சவால்கள் மாற்றுத்திறனாளி மாணவர்கள் மீதான சவால்களாக அவர்கள் மீது சமத்தப்படலாம்.

• உடல் சார்ந்த தடைகள்

சில மாவட்டங்களில் மாணவர்கள் சென்றடைய முடியாத அல்லது அவர்களுக்கு வாய்ப்பாக அமையாத பள்ளிகளுக்குச் செல்லுமாறு உடல் ஊனமுற்ற மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர். பொருளாதார ரீதியாக வசதிகளற்ற பள்ளிமுறைகளில் குறிப்பாக ஊரக நாட்டுப்புறப் பகுதிகளில் உடைந்துபோன, பராமரிக்கப்படாமலுள்ள பள்ளிக்கட்டடங்கள் அவர்கள் செல்வதற்கான வாய்ப்பைத் தடுக்கின்றன.

• உள்கட்டமைப்பு

சிறப்புத்தேவைகளுள்ள மாணவர்களுக்குண்டான முறையாகச் சுற்றுச்சூழல் தடைகள் என்பனவற்றில் கதவுகள், செல்லும் வழிகள், மாடிப்படிகள், சாய்வுதளங்கள், பொழுதுபோக்கான பகுதிகள் - ஆகியன அடங்கும். பள்ளிக்கட்டடம் அல்லது வகுப்பறையில் நுழைவதற்கு இவை மாணவர்கள் சிலருக்கு தடைகளை ஏற்படுத்துகின்றன. மாடிப்படிகள், சாய்வுதளங்கள், பொழுதுபோக்கான பகுதிகள் - ஆகியன அடங்கும். பள்ளிக்கட்டடம் அல்லது வகுப்பறையில் நுழைவதற்கு இவை மாணவர்கள் சிலருக்கு தடைகளை ஏற்படுத்துகின்றன.

• பாடத்திட்டம்

பரிசோதனை அல்லது செய்துபார்த்தலுக்கு இடமளிக்காத அல்லது பலவகை, மாறுபட்ட கற்பித்தல் முறைகளைப் பயன்படுத்த அனுமதிக்காத நெகிழ்ச்சியற்ற, இறுக்கமான பாடத்திட்டமானது உள்ளடக்கியக் கல்விக்கு மிகப்பெரும் தடையாகும். புலவகையான கற்றல் பணிகளை அங்கீகரிக்காத கல்வி, படிப்புத்திட்டங்கள் மாணவர்கள் அனைவரின் பள்ளி அனுபவங்களுக்குத் தடைகளாகின்றன. மன வளர்ச்சி குன்றிய மற்றும் உடல் ஊனமுன்றவர்கள் என அங்கீகரிக்கப்பட்டவர்களுக்கும் கூட அவை தடைகளாகும்.

• ஆசிரியர்கள்

மாற்றுத்திறனாளிகளுடன் பணியாற்றிட பயிற்சிபெறாத, விருப்பமில்லாத, ஆர்வமில்லாத ஆசிரியர்கள் உள்ளடக்கியக் கல்வியின் வெற்றிக்கு மிகப்பெருந்தடைகளாவர். பயிற்சிகளால் பலநேரங்களில் உண்மையாக திறம்பட செம்மையாக அமைவதில்லை. ஆசிரியர்கள், பயிற்றுநர்கள் பணிச்சுமையில் துன்புற்றுக்கொண்டிருக்கின்றனர். ஏற்கெனவேயுள்ள ஒரே அல்லது அதே பாடங்களை பல்வேறு அணுகுமுறைகள் வாயிலாக நடத்த வேண்டிய புதிய பொறுப்புகளை ஏற்க அவர்கள் கோபமடையலாம்.

ஆர்வமில்லாத ஆசிரியர்கள் உள்ளடக்கியக் கல்வியின் வெற்றிக்கு ஏற்கெனவே கடுமையான மிகப்பெருந்தடைகளாவர். பயிற்சிகளால் பலநேரங்களில் உண்மையாக திறம்பட செம்மையாக அமைவதில்லை. ஆசிரியர்கள், பயிற்றுநர்கள் பணிச்சுமையில் துன்புற்றுக்கொண்டிருக்கின்றனர். ஏற்கெனவேயுள்ள ஒரே அல்லது அதே பாடங்களை பல்வேறு அணுகுமுறைகள் வாயிலாக நடத்த வேண்டிய புதிய பொறுப்புகளை ஏற்க அவர்கள் கோபமடையலாம்.

• மொழியும் செய்தித்தொடர்பும்

மாணவர்களுக்குப் புதிதாக உள்ள, அவர்களுக்குத் தெரியாத ஒரு குறிப்பிட்ட மொழியில் கற்பிக்கப்படும் பொழுது அவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டுமென மாணவர்கள் பலரும் எதிர்பார்க்கின்றனர். கற்றல் வெற்றி பெற இது மிகவும் முக்கியமான தடை என்பது தெளிவாகும். அடிக்கடி இந்த மாணவர்கள் பாகுபடுத்தப்படுகிறார்கள். அவர்களிடமிருந்து எதிர்பார்ப்பும் குறைகிறது.