தன் மதிப்பீடு : வினாக்கள் - II |
---|
|
2.6 தொகுப்புரை
தொகுப்புரை
மாணவர்களின் வளர்ச்சிநிலைக்கேற்ப அவர்களின் உள்ளமும், மொழியும் வளர்ச்சி பெறுகின்றன. மாணவர்களின் உள்ளர்ந்த திறன்களின் அடிப்படையில் கற்றல் கற்பித்தல் நிகழ வேண்டும். மாணவர்களின் ஊக்குவித்தல், தானே கற்றல், சுய மதிப்பீடு என்ற அடிப்படையில் அவர்களைக் கொண்டு செல்வது அவசியம். ஆசிரியர்கள் மாணவர்களின் மொழி அறிவை மேம்படுத்தச் சூழ்நிலையுடன் பொருத்தப்பாட்டுடைய செயல்களைப் பயிற்சியாக அளிக்க வேண்டும். சிறப்புத் தேவையுடையாரின் தேவைகளை அறிந்து அவர்களையும் ஊக்குவித்துக் கற்றல், கற்பித்தலில் ஈடுபடுத்த வேண்டும். அன்றாட வாழ்வியல் திறன்களைச் சரியாகக் கையாளும் திறனையும் மாணவர்களுக்கு அளிப்பது ஆசிரியரின் கடமையாகும்.