2.5 குழந்தையும் வாழ்வியல் திறன்களும்
குழந்தையும் வாழ்வியல் திறன்களும்
வாழ்வியல் திறன் என்பது அன்றாட வாழ்க்கையின் தேவைகளையும், சவால்களையும் மனிதர்கள் திறம்பட சமாளிக்க உதவும் தகவமைப்பையும் நேர்மறையான நடத்தைகளையும் குறிப்பதாகும். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் வாழ்க்கைத்திறன் என்பதை உளவியல் திறன் என்றும் கூறுவர். இத்தகைய திறன்களை குழந்தைகள் பின்பற்றுவது தேவையாகிறது.
வாழ்வியல் திறன்களை அடிப்படையாகக் கொண்ட கல்வி பல பகுதிகளிலும் குழந்தை மேம்பாட்டிற்கும் சுகாதார மேம்பாட்டிற்கும் ஆதரவாக நீண்ட வரலாறு கொண்டுள்ளது. 1986 ஆம் ஆண்டில், சுகாதார மேம்பாட்டிற்கான ஒட்டாவா சார்டர் என்ற அமைப்பு சிறந்த ஆரோக்கியத் தேர்வுகள் செய்வதில் வாழ்வியல் திறன்களை அங்கீகரித்தது. குழந்தைகளின் முழு உரிமையின் வளர்ச்சிக்காக கல்வி இயக்கப்பட வேண்டும் என்று கூறி, குழந்தைகளின் உரிமைகள் மீதான 1989 ஒப்பந்தம் (CRC) வாழ்வியல் திறன்களை கல்வியுடன் இணைத்தது. உலக சுகாதார அமைப்பு (WHO) 10 வகையான வாழ்வியல் திறன்களைக் கூறியுள்ளது. மேலும் தமிழ்நாடு,
பள்ளிப்பாடநூல்களிலும் வாழ்வியல் திறன்கள் அமைந்துள்ளன. அவை :
- தன்னை அறியும் திறன்
- சிக்கல் தீர்க்கும் திறன்
- முடிவெடுக்கும் திறன்
- கூர்சிந்தனைத்திறன்
- படைப்பாக்கச் சிந்தனைத்திறன்
- சிறந்த தகவல் தொடர்புத்திறன்
- இணக்கமான உறவுக்கான திறன்கள்
- பிறரை அவர் நிலையிலிருந்து புரிந்துகொள்ளும் திறன்
- உணர்வுகளைக் கையாளும் திறன்
- மன அழுத்தத்தைக் கையாளும் திறன்
தனக்குள்ளேயே தொடர்பு கொள்ளும் ஆற்றல் வாய்க்கப் பெற்ற மாணவன், உள்ளுணர்வு உள்ளவனாகவும், சுயமாக தன்னை ஊக்குவிக்கும் தன்மையுள்ளவனாகவும் திகழ்வான். இவன் வகுப்பின் முன் தன் படைப்புகளைச் சிறப்பாகப் படைப்பதில் ஆர்வம் காட்டுவான்.
குழந்தைகள் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலும் அதற்கு பிடித்ததாகதான் இருக்கும். ஆனால், நமக்கு பிடிக்காமல் போகலாம். எனவே இவர்களின் வளர்ப்பில் தனி கவனம் செலுத்த வேண்டும். எந்த எழுது பொருட்களும் குழந்தைகளின் கையில் கிடைத்தால், பார்க்கும் இடங்களில் எல்லாம் கிறுக்கி வைப்பார்கள். இந்த குழந்தைகளுக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் இருக்கிறது என்பதை அறிந்து ஊக்கப்படுத்த வேண்டும். பாட்டு, நடனம், நடிப்பு, இசை, விளையாட்டு,பேச்சு, ஆராய்ச்சி இதில் எந்த துறையில் ஆர்வம் உள்ளது என குழந்தைகளின் செயல்பாடுகளை வைத்தே கண்டு பிடிக்கலாம்.
சிக்கலைத் தீர்ப்பது நம் வாழ்வில் உள்ள பிரச்சனைகளை ஆக்கபூர்வமாக சமாளிக்க உதவுகிறது. தீர்க்கப்படாமல் விடப்படும் முக்கியமான பிரச்சனைகள் மன அழுத்தத்தை உண்டாக்கும் மற்றும் அதனுடன் சேர்ந்து உடல் உளைச்சலுக்கு வழிவகுக்கும். சிக்கலைத் தீர்ப்பது என்பது மோதல்கள் அல்லது சிக்கல்களைக் கண்டறிந்து தீர்க்கும் செயல்முறையாகும். இது ஒரு சிக்கலை அதன் கூறு பகுதிகளாக உடைத்து, சாத்தியமான தீர்வுகளைப் பற்றி சிந்தித்து, பின்னர் சிறந்ததைத் தேர்ந்தெடுப்பதை உள்ளடக்குகிறது. சிக்கலைத் தீர்ப்பது அனைவருக்கும் ஒரு முக்கியமான திறமையாகும், ஏனெனில் இது நம் வாழ்க்கை, வேலை மற்றும் சமூகங்களில் உள்ள சிக்கல்களைக் கண்டறிந்து தீர்க்க உதவுகிறது.
முடிவெடுக்கும் திறன் என்பது தேவைகளைப் புரிந்துகொள்வது, ஒப்பிடக்கூடிய விருப்பங்களை மதிப்பிடுவது மற்றும் ஒரு சிறந்த விருப்பமாக சுருக்கவும். முடிவெடுக்கும் திறன்கள் ஆராய்ச்சி, சேகரித்தல் & தரவு பகுப்பாய்வு, பயனுள்ள மற்றும் திறமையான இறுதி முடிவுக்கு சரியான தீர்ப்பை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது.
முடிவெடுப்பது நம் வாழ்க்கையைப் பற்றிய முடிவுகளை ஆக்கபூர்வமாக சமாளிக்க உதவுகிறது. இது ஆரோக்கியத்திற்கு விளைவுகளை ஏற்படுத்தும். வெவ்வேறு விருப்பங்களின் ஆரோக்கிய மதிப்பீடு மற்றும் இந்த வெவ்வேறு முடிவுகள் என்ன விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பது தொடர்பாக அவர்களின் செயல்களைப் பற்றி எவ்வாறு செயலில் முடிவெடுப்பது என்பதை குழந்தைளுக்குக் கற்பிக்க வேண்டும்.
வாழ்க்கை நிகழ்வுகள், தகவல்கள் முதலியவற்றை எந்தச் சார்புமின்றி நடுநிலையோடு பகுத்தாய்வும் திறனே கூர்சிந்தனைத் திறனாகும். நம்முடைய சிந்தனைச் செயல்பாடு இவற்றைத் தீர்மானிக்கும் காரணிகளை எடைபோட இக்கூர்சிந்தனைத் திறன் உதவுகிறது. மாணவர்கள் எந்தவொரு செயலைச் செய்கின்ற போதும் அதன் விளைவுகளை எண்ணி முன்கூட்டியே சிந்தித்துச் செயல்பட வேண்டும். அவ்வாறு செயல்பட்டால்தான் திறம்பட எண்ணியவாங்கு இருக்க முடியும்.
படைப்பாக்கச் சிந்தனை என்பது சரளமாக புதிய உத்திகளை உருவாக்குதல் ஆகும். மொழியின் அடிப்படைத்திறன்களை சரியாக பயன்படுத்தியவன் புதியன படைக்கின்ற ஆற்றலைப் பெற்றிருப்பான். அதனால் சிந்தனைத்திறன் அதிக்கரிக்கும். எழுத்தாற்றலும் பேச்சாற்றலும் இயல்பாக இருக்கும் குழந்தைக்களுக்கு படைபாற்றல் வளரும். கவிதை, கதைக்கூறுதல் சிந்தனைத்திறன் மிளிரும்.
சிறந்த தகவல்தொடர்பு என்பது, நமது கலாச்சாரம் மற்றும் சூழ்நிலைகளுக்குப் பொருத்தமான வழிகளில் வாய்மொழியாக வெளிப்படுத்த முடியும். கருத்துக்கள், ஆசைகள், தேவைகள் மற்றும் அச்சங்களை வெளிப்படுத்த முடியும். தேவைப்படும் நேரத்தில் ஆலோசனை மற்றும் உதவி கேட்க முடியும்.
மனித உறவுகளுக்கு தொடர்பு அவசியம். நல்ல தகவல்தொடர்பு மட்டுமே உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் உங்கள் தொழில்முறை வாழ்க்கையிலும் வெற்றிகரமான ஒருவருக்கொருவர் உறவுகளை ஏற்படுத்த முடியும்.
தகவல்தொடர்பு மூன்று வழிகளில் கேட்க/பகிர்ந்து கொள்ள முடிகிறது. அவை :
- வாய்மொழி
- எழுத்து
- மின்னணு ஊடகம்
ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்கள் குழந்தைகளை வெற்றியாளர்களாக மாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். குழந்தைகளுக்கு அவர்கள் சொல்லும் அறிவுரைகள், போதனைகள், கட்டுப்பாடுகள் என அனைத்துமே இதையே நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. வாழ்க்கையில் வெற்றியாளர்களாக நமது குழந்தைகள் மிளிர்வதற்கு அவர்களை எந்தெந்த வகையில் தயார்செய்ய வேண்டும், என்னென்ன கற்றுக்கொடுக்க வேண்டும், எப்படியெல்லாம் நமது குழந்தையை மாற்ற வேண்டும் என எப்போதும் யோசிக்கும் பெற்றோர்கள், அதற்காகச் சில விஷயங்களில் தங்களையும் மாற்றிக்கொள்ள வேண்டும்.
பெற்றோர்களே இல்லாத குழந்தைகள்கூட வாழ்க்கையில் வெற்றியாளர்களாக மாறியிருக்கின்றார்கள். அதனால், குழந்தைகளின் வெற்றிக்குப் பெற்றோர்கள் மட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது. ஆனால், ஒரு குழந்தை தோற்றுப்போவதற்கு ஏதோ ஒரு வகையில் பெற்றோர்களின் மாற்றிக்கொள்ளாத பிடிவாதமான அணுகுமுறைகள் காரணமாக இருந்திருக்கின்றன என்பதை ஆராய்ச்சிகள் உறுதியாகச் சொல்கின்றன.
நாம் தொடர்பு கொள்ளும் நபர்களுடன் நேர்மறையான வழிகளில் தொடர்பு கொள்ள ஒருவருக்கொருவர் உறவு திறன்கள் நமக்கு உதவுகின்றன. இது நமது மன மற்றும் சமூக நல்வாழ்வுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நட்பு உறவுகளை உருவாக்கி வைத்திருக்க முடியும். இது சமூக ஆதரவின் முக்கிய ஆதாரமாக இருக்கும் குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல உறவை பேணுவதைக் குறிக்கலாம். இது உறவுகளை ஆக்கபூர்வமாக முடிவுக்குக் கொண்டுவருவதையும் குறிக்கலாம்.
குழந்தை பிறப்பின்போது பொதுவான மனவெழுச்சி பரப்பிலிருந்து, படிப்படியான வளர்ச்சி மூலம் பயம், சினம், மகிழ்ச்சி, துக்கம், அன்பு, கருணை, அருவருப்பு போன்ற பல்வேறு மனவெழுச்சிகள் கடக்கின்றனர்.
ஒருவன் எவ்வளவு மிகுதியாக நுண்ணறிவினைப் பெற்று மன ஆற்றல்களைப் பெற்றிருப்பினும், அவன் மனவெழுச்சி முதிர்ச்சி பெற்றிராமல் இருப்பின் வாழ்க்கையில் வெற்றியடைய முடியாது.
மனிதன் தனித்து வாழும் உயிரியன்று; பிறப்பு முதல் அவன் சமுதாயக் குழுக்களைச் சார்ந்து வாழுகிறான். குடும்பம், சுற்றுப்புறம், விளையாட்டுக்குழு, பள்ளி, சமுதாயம், நாடு போன்ற பல உறுப்பினர்களைக் கொண்ட சமூகக் குழுக்களுடன் தொடர்புக்கொண்டு, அவற்றின் செல்வாக்குகளுக்கு உட்பட்டே வாழ்கிறான். குழுக்களின் ஏற்பும் அவற்றின் செயல்களில் ஒன்றிப் போதலும், அவற்றினால் பாராட்டப்படுதலும் தனி மனிதனது மனத்தேவைகளை நிறைவு செய்வனவாகும். உலகத்தொடு ஒன்றி வாழ வேண்டும்.
"நான் நிறைவான மனமகிழ்ச்சியாக இல்லை" அல்லது "என்னில் ஏதோ தவறு உள்ளது" போன்ற தவறான நம்பிக்கைகள் 95% வரை அனைத்து நோய்களுக்கும் காரணமாகின்றன. உடல், மன மற்றும் உணர்ச்சி நோய்களுக்கு மன அழுத்தம் முக்கிய காரணி என்று அறிவியல் ஆராய்ச்சி நிறுவியுள்ளது. சுயநினைவற்ற உடல், மன மற்றும் உணர்ச்சிப் பழக்கங்கள் எவ்வாறு மன அழுத்தம், முதுமை, அடிமையாதல் ஆகியவை எவ்வகையில் நோய்களை உருவாக்குகின்றன என்பதைக் கண்டறிய முடிகிறது. கோபம் அல்லது சோகம் போன்ற தீவிர உணர்ச்சிகள் நாம் சரியான முறையில் பதிலளிக்கவில்லை என்றால் நம் ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.
வாழ்வியல் திறன் கல்வி அடிப்படைக் கல்வி, பாலின சமத்துவம், ஜனநாயகம், நல்ல குடியுரிமை, குழந்தை பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு, கல்வி முறையின் தரம் மற்றும் செயல்திறன், வாழ்நாள் முழுவதும் கற்றல், வாழ்க்கைத் தரம் மற்றும் அமைதியை மேம்படுத்துதல் ஆகியவற்றிற்கு பங்களிக்கிறது.
வாழ்வியல் திறன்களை வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே வளர்த்துக்கொள்வது. உங்கள் பிள்ளையை எதிர்காலத்திற்குத் தயார்படுத்துகிறது, மேலும் தலைமைப் பண்புகளை வளர்க்கிறது, மேலும், அவை குழந்தைகளை மிகவும் இணக்கமாகவும், நம்பிக்கையுடனும், பச்சாதாபத்துடனும் இருக்க உதவுகின்றன. ஆரம்ப ஆண்டுகளில் வாழ்க்கைத் திறன்களை வளர்ப்பதில் நாம் ஏன் கவனம் செலுத்த வேண்டும் என்பதைப் பற்றி மேலும் படித்துத் தெரிந்துக்கொள்ளலாம்.