முகப்பு

1.4 மொழி முதல், இடை, இறுதி எழுத்துகள்

மொழி முதல், இடை, இறுதி எழுத்துகள்

தமிழில் ஒரு சொல்லுக்கு முதலிலும் இடையிலும் இறுதியிலும் என்னென்ன எழுத்துகள் வரும் என்பதை நாம் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டும். ஏனெனில், இக்காலத்தில் பிறமொழிச்சொற்கள் தமிழில் கலந்து வழங்குகின்றன. இத்தகைய சொற்களில் பெரும்பான்மையான எழுத்துகள் தமிழில் மொழிக்கு முதலில் வராதவை. இவற்றைக் கொண்டே தமிழ்ச்சொற்கள் எவை, பிறமொழிச்சொற்கள் எவை என வேறுபடுத்தி அறியலாம்.

உயிரெழுத்துகளில் பன்னிரண்டும் மொழிக்கு முதலில் வரும். பின்வரும் எடுத்துக்காட்டுகளைக் கவனியுங்கள்.

ம்மா, டல், ரவு, கை, தவி, ஞ்சல், ழுத்து, க்கம், ந்திணை, ட்டகம், லை, வை.

உயிர்மெய் எழுத்துகளுள் பின்வரும் வரிசையிலுள்ள எழுத்துகள் மொழிக்கு முதலாகும்.

க, ச, த, ப, ங, ஞ, ந, ம, ய, வ ஆகிய பத்து மெய்களும் உயிருடன் சேர்ந்து மொழிமுதலாகும். இவற்றுள், முதல் ஆறு எழுத்து, அதன் வரிசையுடன் பன்னிரண்டாகும். இறுதியிலுள்ள நான்கு எழுத்துக்குரிய வரிசையில் வகர எழுத்தில் எட்டும், யகர எழுத்தில் ஆறும், ஞகர எழுத்தில் நான்கும் ஙகர எழுத்தில் ஒன்றும் மொழிக்கு முதலில் வரும்.

வரிசை (12) டல், காற்று, கிளை, கீற்று, குடம், கூட்டல், கெடு, கேள், கைவேலை, கொடி, கோட்டை, கௌளி
வரிசை (1)னம்‘ என்பது, இடத்தையும் தன்மையையும் உணர்த்தும் பலபொருள் ஒரு சொல்லாகும். இக்காலத்தில் ‘ங‘ எழுத்து மொழிமுதல் பயன்பாட்டில் இல்லை. ஙப்போல் வளை (ஆத்திசூடி) அங்ஙனம், இங்ஙனம், உங்ஙனம், எங்ஙனம் என அக்காலத்தில் வழக்கில் இருந்தன. எனவே, ங வரிசையில் எந்தச் சொல்லும் இக்காலத்தில் தொடங்குவதில்லை.
வரிசை (12)ட்டம், சார்பு, சினம், சீற்றம், சுக்கு, சூடு, செந்தமிழ், சேர்த்தல், சைகை, சொத்து, சோளம், சௌக்கியம்
வரிசை (4)மலி, ஞாலம், ஞெகிழி, ஞொள்கிற்று. இக்காலத்தில் ஞெ, ஞொ ஆகிய இரண்டும் வழக்கில் இல்லை.
வரிசை (12)ம்பி, தாய், திண்ணை, தீ, துன்பம், தூக்கம், தெய்வம், தேங்காய், தையல், தொழில், தோகை, தௌவல்
வரிசை (12)ன்மை, நாடு, நிழல், நீளம், நுகத்தடி, நூல், நெல், நேற்று, நைதல், நொச்சி, நோய், நௌவி
வரிசை (12) ள்ளி, பாடம், பிள்ளை, பீர்க்கங்காய், புன்னை, பூமாலை, பெண், பேழை, பைந்தமிழ், பொன், போக்கு, பௌவம்
வரிசை (12)லர், மான், மிகை, மீன், முள், மூன்று, மென்மை, மேல், மைவிழி, மொழி, மோப்பம், மௌவல்
வரிசை (6)வனர், யானை, யுகம், யூகம், யோசி, யௌவனம்
வரிசை (8)ண்டி, வாளி, வில், வீடு, வெட்சி, வேலை, வைகை, வௌவால்

மேற்கூறிய தடித்த எழுத்துகள், ஒரு சொல்லுக்கு முதலில் வருகின்றன. இவையன்றி, பிறமொழிச்சொற்கள் தமிழில் கலக்கும்போது, அவற்றின் ஒலிக்கேற்ப, இம்முதல் எழுத்துகளில் தொடங்குவதும் உண்டு. எடுத்துக்காட்டாக,

அநியாயம் (வடசொல்)

ஆப்பிள் (ஆங்கிலச்சொல்)

பின்வரும் எடுத்துக்காட்டுகளையும் கவனியுங்கள். பிறமொழிச்சொற்களுள் சில, தமிழில் எந்த மாற்றமுமின்றி அப்படியே ஒலிக்கப்படுகின்றன. அவை, தமிழ் எழுத்துகளால் எழுதப்பட்டாலும் தமிழ்ச்சொற்கள் அல்ல. அத்தகைய சொற்கள் மொழிக்கு முதலில் வராத எழுத்துகளில் தொடங்கும் சொற்களாகவும் உள்ளன. எடுத்துக்காட்டாக,

லட்டு, ரம்பம், ரப்பர், ரவை, டப்பா, லண்டன், லுங்கி, ரொட்டி, ரிக்க்ஷா, ஜாங்கிரி, ஜிலேபி, ஐஸ்கிரீம், லாபம் போன்று வரும் சொற்களுக்கு முன்னால், இகரம் சேர்த்து ‘இலாபம்‘ என எழுதுவதுண்டு. மேலும், ராமாயணம் – இராமாயணம், லோகம் – உலோகம், ரங்கன் – அரங்கன் என லகர, ரகர எழுத்தில் தொடங்கும் சொற்களுக்கு முன்னால், அ, இ, உ ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி எழுதுவர்.

இக்காலத்தில் எல்லாச் சொற்களுக்கும் இது பொருந்தவில்லை. எடுத்துக்காட்டாக, ஆங்கிலச் சொல்லான ‘ரப்பர்‘ என்பதை, ‘இரப்பர்‘ என எழுதினாலோ பேசினாலோ அதன் உண்மையான பொருள் (Rubber) என்பது அறியப்படாமல், ‘யாசிப்பவர்‘ எனப் பொருளைத் தந்துவிடும். இதனால், பெரும்பாலும், லகர, ரகர எழுத்தில் தொடங்கும் பிறமொழிச்சொற்கள் அந்தந்த எழுத்தையே முதலாகக் கொண்டுள்ளன.

தமிழில் மொழிக்கு இடையில் ர், ழ் ஆகிய மெய்யெழுத்துகள் தத்தம் எழுத்தோடு சேர்ந்து வருவதில்லை. அவை தவிர்த்த பதினாறு மெய்யும் தத்தம் மெய்யோடு மொழிக்கு இடையில் வரும்.

எ.கா :

சக்கரம், எங்ஙனம், மச்சம், மஞ்ஞை, வட்டம், எண்ணம், மொத்தம், முந்நூறு, அப்பம், அம்மி, மெய்யன், பல்லி, கொவ்வை, உள்ளம், குற்றம், அன்னம்.

மேலும் க், ச், த், ப் தவிர்த்து ஏனைய மெய்கள், பிறமெய்களோடு சேர்ந்தும் மொழிக்கு இடையில் வரும்.

எ.கா :

சங்கம், வஞ்சி, வெட்கம், இரண்டு, தந்தம், கம்பன், கொய்சகம், சேர்க்கை, செல்வம், தெவ்யாது, வாழ்க, கள்வன், கற்க, அன்பு.

பன்னிரண்டு உயிரெழுத்தும் பதினொரு மெய்யெழுத்தும், குற்றியலுகரமும் ஆக மொத்தம் 24 எழுத்தும் மொழிக்கு இறுதியில் வரும்.

எ.கா :
1. உயிரெழுத்து தனித்து வருதல்

ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ (ஓரெழுத்து ஒருமொழி)

ஆ (பசு), ஈ (ஓர் உயிரினம், அழிவு, கொடு), ஊ(புலால்), ஏ(அம்பு), ஐ(வியப்பு, அழகு, தலைவன்), ஓ(மதகு கீழ் தாங்கும் பலகை), ஔ(பற்று)

2. உயிரெழுத்து, மெய்யுடன் வருதல்

உயிரெழுத்துகள் பன்னிரண்டனுள் எகரம் தவிர்ந்த ஏனைய பதினொன்றும் மெய்யுடன் கூடி மொழி ஈறாகும்.

சால (ல் + அ), உலா (ல் + ), பனி (ன் + ), தீ (த் +), நடு (ட் + ), பூ (ப் + ), தே (த் + ), தை (த் + ), நொ (ந் + ), போ (ப் +), கௌ (க் + )

• மெய்யெழுத்துகள்

ஞ் – உரிஞ், ண் – மண், ந் – பொருந், ம் – மரம், ன் – பொன், ய் – வேய், ர் – வேர், ல் – வேல், வ் – தெவ், ழ் – வீழ், ள் – வாள்

• குற்றியலுகரம்

சுக்கு, மாசு, வண்டு, சால்பு, அஃது, பாலாறு

பிறமொழிச்சொற்கள் தமிழில் வழங்கும்போது, இங்குச் சுட்டிக்காட்டப்படாத எழுத்துகளில் முடிவதும் உண்டு. அவ்வாறு வரும் எழுத்துகளுடன் உகரம் சேர்த்து ஒலிக்கப்படுகிறது. (எ.கா.) இங்கிலாந் – இங்கிலாந்து

மெய்யெழுத்துகள் பதினெட்டு என நாம் அறிந்துள்ளோம். இவ்வெழுத்துகளுள் சில தம்முடன் தாம் மயங்கும். சில எழுத்துகள் தம்முடன் பிற மயங்கும். இவ்வாறு வருவதனை மெய்யெழுத்துகள் மயங்குதல் எனக் கூறுவர்.

எடுத்துக்காட்டாக, ‘பள்ளி‘ இச்சொல்லைக் கவனியுங்கள். இதில், ளகர மெய்க்கு அடுத்து அதே மெய் (ள் + இ) வந்துள்ளது. இவ்வாறு வருவது மெய்ம்மயக்கம்.

மற்றோர் எடுத்துக்காட்டைப் பாருங்கள். ‘தங்கம்‘ இச்சொல்லில், ஙகர மெய்க்கு அடுத்துக் ககர மெய் (க் + அ) வந்துள்ளது. இவ்வாறு வருவதும் மெய்ம்மயக்கம்தான்.

எனவே ஒரு மெய்யெழுத்தானது, அதே மெய்யெழுத்துடனோ பிற எழுத்துகளுடனோ மயங்கி வரும் என அறிகிறோம், அவை, உடனிலை மெய்ம்மயக்கம், வேற்றுநிலை மெய்ம்மயக்கம் என்பன.

• உடனிலை மெய்ம்மயக்கம்

மெய்யெழுத்துகளுள் ரகரம், ழகரம் ஆகிய இரண்டு மெய்யெழுத்தையும் தவிர்த்து, ஏனைய பதினாறு மெய்யும் தம்முடன் தாம் கூடிவரும். அதாவது, மயங்கிவரும். பின்வரும் எடுத்துக்காட்டுச் சொற்களைக் கவனித்தால் நன்கு விளங்கும்.

க்கம், அங்ஙனம், அச்சம், விஞ்ஞானம், சட்டம், கண்ணன், தத்தை, எந்நாள், அப்பளம், வன்மம், செய்யாமை, வெல்லம், கொவ்வை, பள்ளம், பற்று, கன்னி

• வேற்றுநிலை மெய்ம்மயக்கம்

மெய்யெழுத்துகளுள் க,ச,த,ப ஆகிய நான்கும் தவிர்த்து ஏனைய பதினான்கு மெய்யும் பிற மெய்யெழுத்துகளுடன் கூடிவரும். இவ்வாறு மெய்ம்மயங்குவதை வேற்றுநிலை மெய்ம்மயக்கம் என்கிறோம். பின்வரும் எடுத்துக்காட்டுகள்வழி, இதனைப் புரிந்துகொள்ளலாம்.

ங்கம், பஞ்சு, திட்பம், வெண்கலம், பந்து, பம்பரம், செய்தி, போர்வை, வெல்க, தாழ்ப்பாள், கேள்வி, கற்குவியல், மன்றம்.

எந்தெந்த எழுத்துகள் மொழிக்கு (சொல்லுக்கு) முதலிலும், இடையிலும், இறுதியிலும் உறுப்பாக நின்று பொருள் உணர்த்தும் என்பதை இப்பகுதியில் கண்டோம்.