TT02 அடிப்படைத் தமிழ் இலக்கணம்
அலகு - 2
TT0202 தமிழ்ச்சொற்கள் அமைப்பும் வகையும்
இந்த அலகு என்ன சொல்கிறது?
எழுத்துகளால் ஆன சொற்களின் அமைப்பையும், அதன் இயல்பையும் விளக்கும் இலக்கணத்தில் சொற்கள், வேற்றுமை உருபு, பதம், தொடர் அமைப்பு குறித்து இவ்வலகு விளக்குகிறது.
இந்த அலகைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
- நால்வகைச் சொற்களைப் பற்றி அறிந்துகொள்ளலாம்.
- வேற்றுமை உருபுகளைப் புரிந்து கொள்ளலாம்.
- பகுப்பதம், பகாம்பதப் பொருளை அறிந்து கொள்ளலாம்.
- தொகைநிலை, தொகாநிலைத் தொடர்களை உணர்ந்து கொள்ளலாம்.
- துணை வினை, கூட்டு வினைச் சொற்களைப் புரிந்து கொள்ளலாம்.