TT02 அடிப்படைத் தமிழ் இலக்கணம்
2.0 பாட முன்னுரை
பாட முன்னுரை
முதல் அலகில் எழுத்துகளின் வகைதொகை, அவற்றின் இயல்புகள் முதலியவற்றை அறிந்தோம். இரண்டாம் அலகில் அவ்வெழுத்துகளால் ஆன சொற்களின் அமைப்பையும் இயல்பையும் அறிந்துகொள்ள இருக்கிறோம். சொற்களின் அமைப்பையும் இயல்பையும் விளக்கிக் கூறுவது இலக்கணம். இவ்விலக்கணப் பகுதியில் நால்வகைச்சொற்கள், வேற்றுமை உருபுகள், பகுபதம், பகாப்பதம், தொகைநிலைத்தொடர், தொகாநிலைத்தொடர், துணைவினைகளும் கூட்டுவினைகளும் ஆகியவை விளக்கப்பட்டுள்ளன. ஆசிரிய பணியாற்ற விரும்புவோர் இவ்விலக்கணங்களை அறிந்துகொண்டால், அவர்களால் மாணவர்களுக்கு எளிதாக இலக்கணங்களைக் கற்றுத்தர முடியும்.