TT02 அடிப்படைத் தமிழ் இலக்கணம்
அலகு - 1
TT0201 எழுத்து வடிவமும் ஒலிப்பு முறையும்
இந்த அலகு என்ன சொல்கிறது?
மனிதன் தன்னுடைய உளக் கருத்துக்களைப் பிறர்க்கு உணர்த்தப் பயன்படும் கருவி மொழியாகும். அந்த மொழியானது மக்களின் குரலில் பிறந்து செவிக்கு உணவாகின்ற ஒரு ஒலிநிலை ஆகும். மேலும் மொழி என்பது மக்களையும் சமூகத்தையும் இணைக்கின்ற ஒரு பாலமாகவே செயல்படுகிறது. மொழியானது தன்னை நிலைநிறுத்திக்கொள்வதற்கு அதன் எழுத்து முக்கிய பங்கு வகிக்கிறது. மொழிகளில் தமிழ்மொழியும், அதன் எழுத்தும் காலத்தால் அழியாது நிலைப்பெற்று நிற்பதுடன் தனித்தன்மையையும் பெறுகிறது. அத்தகைய தமிழ்மொழியின் எழுத்துகள் தோற்றம், அவற்றின் வகை, அதன் ஒலிப்பு முறை முதலானவற்றைப் பற்றி இப்பாடம் எடுத்துரைக்கிறது.
இந்த அலகைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
- தமிழ் எழுத்துகளின் தோற்றத்தை அறிந்து கொள்ளலாம்.
- தமிழ் எழுத்துகளின் வகைகளைப் புரிந்து கொள்ளலாம்.
- தமிழ் எழுத்துகளின் ஒலிப்பிறப்பு முறைகளை உணரலாம்.
- மொழிக்கு முதல், இடை, கடை ஆகியவற்றில் வருகின்ற எழுத்துகளைத் தெரிந்து கொள்ளலாம்.
- கிரந்த எழுத்துகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்