TT02 அடிப்படைத் தமிழ் இலக்கணம்
அலகு - 3
TT0203 இலக்கியப் பாடுபொருள்
இந்த அலகு என்ன சொல்கிறது?
தமிழின் அடிப்படை இலக்கணமான ஐந்திலக்கணங்களில் அகம், புறம், யாப்பு, அணி முதலானவற்றை இவ்வலகில் காணலாம். அகப்பொருளின் ஐந்திணைகள், அவற்றின் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருளையும், மறவர்களின் வீரம், போர், தூது, வெற்றி, கொடை, நிலையாமை முதலானவற்றை எடுத்துரைக்கும் புறப்பொருள் இலக்கணத்தையும், அதன் பன்னிரெண்டு திணைகளையும், செய்யுளை இயற்றுவதற்குரிய யாப்பு இலக்கணத்தையும், அதன் உறுப்புகளையும், செய்யுள்களில் உள்ள அழகுகளைப் பற்றிக் கூறும் அணி இலக்கணத்தையும் இவ்வலகில் எடுத்துரைக்கப்படவுள்ளன.
இந்த அலகைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
- அகப்பொருள் திணைகளை அறிந்துகொள்ளலாம்.
- புறப்பொருள் திணைகளை புரிந்து கொள்ளலாம்.
- தொல்காப்பியரின் மரபுப்பெயர்களை அறிந்துகொள்ளலாம்.
- யாப்பிலக்கண பாவகைகளைத் தெரிந்துகொள்ளலாம்.
- அணியிலக்கண அழகை அறிந்துகொள்ளலாம்.