முகப்பு

3.0 பாட முன்னுரை

பாட முன்னுரை

தமிழின் அடிப்படை தமிழிலக்கணம் பற்றி அறிய அகத்திணை, புறத்திணை, யாப்பிலக்கணம், அணியிலக்கணம் ஆகியனவற்றை அறிவது அவசியமாகிறது. தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்கள் “இலக்கியத்திற்கு இலக்கணம் இயம்பல் என்பதற்கிணங்க” எந்தப் பாடநூலையும் திறம்பட கற்பிக்கின்ற நெறிமுறையைப் பெற்றிருக்க வேண்டும்.

நம் தமிழ்ச் சான்றோர்கள் செய்யுளுள் அமையத் தகுந்த பொருள்களை அகப்பொருள், புறப்பொருள் என இரண்டு வகையாகப் பகுத்துள்ளனர். இவ்வலகில் அகத்திணை, புறத்திணை, யாப்பு, அணியிலக்கணம் ஆகியவற்றையும், இத்துடன் சொல்லாட்சிப் பிறழ்வுகளையும் கற்க உள்ளோம்.